தீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜம்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபே-வை சந்தித்து பேசினார்.

14வது ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு ஜப்பானின் ஒசாகாவில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதில்பங்கேற்க பிரதமர் மோடி  ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமரை  சந்தித்து பேசினார்.

அப்போது, ஜப்பான் உடனான இருதரப்பு உறவுகள் குறித்து ஷின்சோ அபே உடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த மாநாடு குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர், உலகம் இன்று எதிர்கொண்டு வரும் மிகப்பெரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து உலகநாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப் பெரும் சவால்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி நாளை சந்தித்துப்பேசுகிறார். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்க அதிபருடன் முதல்முறையாக பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோஜன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப்பேச திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய உயரதிகாரிகள் இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.  ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றார்

.இந்தசந்திப்பில் பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. பேச்சு வார்த்தையில் ஜப்பான் பிரதமர் மீண்டும் இந்திய பிரதமர் மோடியின் லோக் சபா வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், ”அடுத்து எனதுமுறை.எனது இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்,” என்று சின்ஷோ அபே கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...