இதற்கு பின் ஜி-20 மாநாடு தொடங்கியதும் ஜப்பானிய பிரதமர் ஷின்சு அபே தலைவர்களை பெயர்சொல்லி மேடைக்கு அழைத்தார். பின்னர் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர
மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்கத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் 5ஜி செல்போன் தொழில் நுட்ப நெட்வொர்க்குகளின் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்த துறையில் ஒத்தகருத்துடைய நாடுகளுடன் பணிபுரிய விரும்புகிறோம். இது பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியமானது. இதுபோல் 5ஜி நெட்வொர்க்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் அவசியம்.
நியாயமான தடையற்ற பாகுபாடற்ற வர்த்தகத்தின் அவசியத்தை மாநாடு வலியுறுத்த வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே கூறினார். பின்னர், பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பேசிய மோடி, பயங்கரவாதம் உலகையே அச்சுறுத்திவருவதாக கூறினார்.
பயங்கரவாதம் மக்களை மட்டுமன்றி, பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிப்பதாக மோடி கூறினார். ஸ்திரமற்ற பொருளாதார சூழல் குறித்து கவலைதெரிவித்த மோடி,
இதனால் 1 புள்ளி 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 89 புள்ளி 71 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை நிலவுவதாககூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சர்வதேசளவில் தற்போதைய பிரச்னைகள், பன்முக பொருளாதார நடைமுறை ஆகியவற்றை குறித்து விவாதிப்பது அவசியம்.
அதன்பிறகு ரஷ்யா – இந்தியா சீனா இடையே முத்தரப்பு கூட்டம் நடந்தது. அதிலும் தடையற்றவர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார். அதில் தீவிரவாதத்துக்கு நிதிதடுப்பு குறித்து மோடி பேசியதாக கோகலே தெரிவித்தார்.
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்-மோடி சந்திப்பு நடைபெற்ற போது கேமராவை பார்த்து மெர்கல் அதிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சவுதி இளவரசர் முகம்மதுபின் சல்மான் சவுத், கனடா அதிபர் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்களையும் மோடி சந்தித்தார். அப்போது மோடியின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் இருந்து கூடுதலாக 30,000 இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் புனிதபயணம் வருவதற்கு சவுதி அரேபியா அரசு அனுமதியளிப்பதாக உறுதியளித்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த போது தேர்தலில் தலையிடும் வேலையெல்லாம் கூடாது என செல்லமாக கடிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் நடைபெற்ற இரவுவிருந்தில் மோடியுடன், டிரம்ப் அமர்ந்து உணவருந்தினார். இருநாடுகள் மத்தியில் வர்த்தக உரசல் நிலவிவந்த நிலையில் இந்த காட்சி இருவரின் நெருக்கத்தை காட்டுவதாக அமைந்தது.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |