5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பொருளாதாரத்தை அதிகரிக்கபொருளாதார ஆய்வறிக்கை வழிகாட்டியுள்ளது என்று பாராட்டியுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.
மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்த பொருளாதாரவளர்ச்சி, 2020ம் நிதியாண்டில் 7 சதவீதமாக உயரக் கூடும் என்று அதில் தெரிவிக்கப் பட்டது. “பொருளாதாரம் தொடர்ந்து நிலைத் திருப்பதால் 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என்று அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகமாற, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாகத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. “நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை பொருளாதாரத்தின் தடைசக்திகளை உடைத்து தள்ளவேண்டும், அதேநேரத்தில் அதிகதிறன் பயன்பாடு மற்றும் வணிக எதிர்பார்ப்புகளின் உயர்வு ஆகியவை 2019-20ம் ஆண்டில் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்க பட்டுள்ளது.
இந்தபொருளாதார ஆய்வறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், பொருளாதார ஆய்வறிக்கை, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கான ஒருபார்வையை கோடிட்டுக் காட்டுகிறது. இது சமூகத்துறையின் முன்னேற்றம், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வது மற்றும் எரிசக்தி பாதுகாப்பிலிருந்து பெறப்பட்ட லாபங்களை சித்தரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |