நாடாளுமன்றத்தில் 2ஆவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019-2020-ம் நிதியாண்டுக்கான மத்தியபட்ஜெட்டை இன்று தாக்கல்செய்தார். இது அவர் தாக்கல்செய்த முதல் பட்ஜெட்டாகும். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 2019-2020-ம் ஆண்டுக்கான முழுமையான மத்தியபட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்பட வில்லை. எனினும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சராக இருந்த பியூஷ்கோயல் தாக்கல் செய்திருந்தார்.
இதில் மக்களை கவரும் நல்ல பலதிட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடந்துமுடிந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. அப்போது நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்தநிலையில் அவர் கடந்த ஒருமாதமாக முழுபட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் பட்ஜெட்டுக்கு முன்பே தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நேற்றைய தினம் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தார்.
சூட்கேஸுக்கு பதிலாக சிவப்பு நிறபையில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டுவந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்கிவைத்த நிர்மலா பட்ஜெட்டை தாக்கல்செய்தார். அவர் கூறுகையில் நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சிலவருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சிலவருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம். “சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்துகாட்டியுள்ளோம்” என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
2highest