அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரகமந்திரம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல்செய்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது,
கடந்த ஐந்து ஆண்டுகளில் 657 கி.மீட்டர் அளவுக்கு மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. உதான் திட்டம் மூலம் சிறியநகரங்களுக்கும் குறைந்த விலையில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சரக்குப் போக்கு வரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்.ஒரு நாடு, ஒரே மின்சார விநியோக திட்டம் கொண்டுவரப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறுவியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
2030ம் ஆண்டுக்குள் ரயில்வேதுறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுசெய்ய நடவடிக்கை.நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுக்கு 20 லட்சம்கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது.
அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பது தான் மத்திய அரசின் தாரகமந்திரம் என்று அறிவித்தார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |