ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை என்றார் பாஜக தேசியச்செயலர் எச். ராஜா.
தஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு புதன் கிழமை மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

இஸ்ரேல் நாட்டில் ஹைட்ரோ கார்பன் மூலம் தான் முழு எரிசக்தியும் நிறைவு செய்யப்படுகிறது. அந்நாடு உலகளவில் விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டுவதில்லை. ஆனால், நம் நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டபடுகிறது. எனவே, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

நிலத்தடி நீர் 2,000 அடிக்குள் இருக்கிறது. ஆனால், ஹைட்ரோ கார்பன் 6,000 அடிக்கும் அதிகமான ஆழத்தில் தான் எடுக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் முறை பயன்படுத்தினால் நிலத்தடி நீர் மாசுபடும். சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். இந்த முறையை பிரதமர் மோடியே மறுத்துவிட்டார்.
எனவே, ஆழ்குழாய் கிணறு போடுவதுபோல மேற்கொள்ளும்போது, 6,000 அடிக்கு கீழே உள்ள இயற்கை எரிவாயு மட்டுமேகிடைக்கும். அதனால், பாதிப்பு எதுவும் ஏற்படாது.

அய்யாக்கண்ணு, வைகோ போன்ற சிலர்தான் வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்தி, மக்களைத் தூண்டி விடுகின்றனர்.தமிழ் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்குத் தமிழ்நாட்டில் பெரிய சதிநடக்கிறது. மேலும், தலித் என்ற போர்வையில் இந்துக்களை பிளவுபடுத்தி மதமாற்றம் செய்யப்படுகிறது.

காவிரி நீர் மேலாண்மை, நிலசீர்த்திருத்தம் உள்ளிட்டவற்றை மாமன்னன் ராஜராஜ சோழன்தான் கொண்டுவந்தான். உலகத்திலேயே முதல் கப்பற்படையை அமைத்தவர் ராஜேந்திர சோழன். அதனால்தான் ராஜேந்திர சோழனுக்கு மோடி அரசு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. நம் கப்பற்படையின் ஒருகப்பலுக்கு ராஜேந்திர சோழன் பெயர் வைத்துள்ளோம். இந்நிலையில், ராஜராஜ சோழன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பா. ரஞ்சித் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார் ராஜா.

தஞ்சாவூரில் இயக்குநர் பா. ரஞ்சித்தை கண்டித்து மாமன்னன் ராஜராஜசோழன் எழுச்சிபேரவை சார்பில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால், ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...