பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ள நிலையில், மற்ற பிரிவினரைப்போல, இந்தப் பிரிவினருக்கும், வயது உச்சவரம்பில் விலக்கு அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஓபிசி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, அரசுப்பணியில் சேருவதற்கு, வயது உச்சவரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சலுகையை, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கும் அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர், ஜிதேந்திர சிங்குக்கு, சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:அரசுப்பணிகளில், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப் பிரிவினருக்கு வயது உச்சவரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது.

பல்வேறு தரப்பினருடன் நடத்திய ஆலோசனையின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும், இந்தசலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அதிகபலன் கிடைக்கும். இது குறித்து ஆராய்ந்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அந்தகடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தற்போதைய விதிகளின்படி, அரசுப் பணிகளில் சேருவதற்கு, ஓ.பி.சி., பிரிவினருக்கு, மூன்று ஆண்டுகளும், எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு, ஐந்து ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, மற்றபிரிவினருக்கு வழங்குவதுபோல், மதிப்பெண் சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...