குல்பூஷண் ஜாதவ் வழக்கு: இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு

பாகிஸ்தானை உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்புஅளித்துள்ளது.

ஈரானிலிருந்து சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, இந்தியாவுக்காக உளவுபார்த்ததாக குல்பூஷண் ஜாதவை அந்நாட்டு அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கைதுசெய்தனர். இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத்தொடுத்தது. ஈரானிலிருந்த  பாகிஸ்தான் கடத்திவந்து கைது செய்ததாக இந்தியா குற்றஞ்சாட்டியது. இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நிறைவேற்ற இடைக்காலத்தடை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் 4 நாள்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் செயல்பாடு சந்தேகத்துக் கிடமான வகையில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டிய இந்தியா, அந்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என வாதிட்டது.

இந்நிலையில்,  மூத்த நீதிபதி அப்துல்லாவி அகமது யூசுப், இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...