நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்தசமரசமும் செய்யாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேசளவில் போர் களச்சூழல் மாறி உள்ளதால் அதற்கு ஏற்ப இந்திய முப்படைகளும் நவீன மயமாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கார்கில்போரில் இந்தியா வெற்றிபெற்றதன் 20 வது ஆண்டு விழா டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தவிழாவில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
விழாவில்பேசிய பிரதமர் மோடி, கார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் சொந்தமானதல்ல, அது நாட்டின் வெற்றி என்றார். நாட்டின் பாதுகாப்பில் மத்தியஅரசு ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், விண்வெளி போரிலும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு படைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக இன்னுயிரை தந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை இப்போது மீண்டும் ஆட்சிக்குவந்தவுடன், உயர்த்தப் பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |