ஆயுஷ்மான் பாரத்திட்டம் மூலம், நாடுமுழுவதும் மொத்தம் 10.74 கோடி ஏழை குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
ஏழை குடும்பங்களும் உயர்தர மருத்துவ சிகிச்சையை பெறும்நோக்கில் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை மத்தியஅரசு செயல்படுத்தி வருகிறது. இந்ததிட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளை இலவமாக பெறமுடியும்.
இந்ததிட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் பேசினார். அப்போது பேசியவர்,”மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க, கடந்த ஜூலை 23ம் தேதிவரை 16,039 மருத்துவமனைகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இதில் 8,059 மருத்துவமனைகள் தனியாருக்கு சொந்தமானவை ஆகும்.
இந்ததிட்டத்தின் மூலம் சுமார் 10.74 கோடி ஏழை குடும்பங்கள் பலனடைந்துள்ளன. இந்ததிட்டத்தில் கூடுதல் குடும்பங்களைசேர்க்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்ததிட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதாவது காப்பீட்டு முறையிலோ அல்லது டிரஸ்ட்வழியாகவோ அல்லது இரண்டும் கலந்த முறையிலோ செயல்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு ஹர்சவர்தன் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்திருப்பதாக தெரிவித்தார்.குழந்தை இறப்புவிகிதத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக மத்திய பிரதேசம், அசாம், சத்தீஷ்கார், ஒடிசா ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன” ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |