அதிநவீன ஆயுதங்கள்கொண்ட, போரில் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அம்சம்கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக 4 ஹெலிகாப்டர்களை ஒப்பந்தப்படி இந்திய விமானப் படையிடம் அமெரிக்க போயிங் நிறுவனம் இன்று சனிக்கிழமை (ஜூலை 27) ஒப்படைத்தது.
இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து, அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ஏ-64-இ ரக ஹெலிகாப்டர்கள் 22 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழு த்தானது.
அதனடிப்படையில், போயிங் நிறுவனத்தின் அரிசோனாவில் உள்ள தொழிற் சாலையில் தயாரிக்கப்படும் அபாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களில் ஒரே ஒருஹெலிகாப்டர் மட்டும் இந்திய விமானப்படையிடம் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து ஏர் மார்ஷல் புட்டோலா பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 4 ஹெலிகாப்டர்கள், ஜூலை மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அமெரிக்காவில் இருந்து அண்டானோவ் ஏஎன்224 விமானத்தின் மூலம் 4 அபாச்சி ஏ-64-இ ரக ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்பட்டு உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் ஹிண்டன் விமானப்படைதளத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று சனிக்கிழமை (ஜூலை 27) முதற்கட்டமாக 4 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்த அமெரிக்கபோயிங் நிறுவனம், அடுத்தவாரத்தில் கூடுதலாக 4 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும். 2020 ஆம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இவை உரிய சோதனைக்குப்பிறகு, பதான்கோட் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, முறைப்படி இந்திய விமான படையில் சேர்க்கப்படும் என தெரிகிறது
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |