கர்நாடக சட்டப் பேரவையில் தமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, சித்தராமையா மற்றும் குமாரசாமி முதலமைச்சர்களாக இருந்தபோது பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை என்றும், நிர்வாகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், தானும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடபோவதில்லை எனவும் கூறிய எடியூரப்பா, மறப்போம் மன்னிப்போம் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும், தம்மை எதிர்ப்பவர்களையும் அன்புசெய்வதாகவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எடியூரப்பா கூறினார்.
விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்கவிரும்புவதாக தெரிவித்த எடியூரப்பா, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 தவணையாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். அனைவரும் இணைந்து செயல்படலாம் என அழைப்புவிடுத்த எடியூரப்பா, தமது அரசு மீது அனைவரும் நம்பிக்கை தெரிவித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குரல்வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தெரிவித்தார். பெரும்பான்மைக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |