பாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் வேளையில், அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடத்த வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின்படி அனைவரையும் உடனடியாக காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு இந்திய ராணுவம் எச்சரித்தது.

இதனைத்தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிநுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு சுட்டுவீழ்த்தினர். இதில் பாக். கமாண்டோவைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

ஜூலை 31-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப்பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 36 மணிநேரத்தில் இந்தபோக்கு தீவிரமடைந் துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் மூலம் பயங்கர வாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக இந்தியராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 7 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுட்டுவீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்துவருவதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தானின் முத்திரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...