எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜேட்லி இன்று காலமானார். அவருக்கு வயது 66.
உடல்நலக் குறைவு காரணமாக தொடர்சிகிச்சையில் இருந்துவந்த அருண் ஜேட்லி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரை மத்திய நிதித்துறை அமைச்சராக பதவிவகித்தவர் அருண் ஜேட்லி. அவ்வப்போது ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் வெளிநாட்டிலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். உடல் நலக் குறைபாடு காரணமாகவே அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார்.
1952ம் ஆண்டு பிறந்தவர் அருண்ஜேட்லி. இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர்.
விலைஉயர்ந்த கைக்கடிகாரங்களை சேமிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த ஜேட்லி, வழக்குரைஞராக இருந்து, அரசியலில் ஈடுபட்டு, பாஜகவின் மிகமுக்கியத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தவர். தேர்தல்களின் போது அருண் ஜேட்லி வகுக்கும் பலவியூகங்கள் இதுவரை தோல்வியடைந்த தில்லை.
2014 – 2019ம் ஆண்டில் மத்திய நிதித்துறை அமைச்சராகவும், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராகவும் பணியாற்றியவர். மோடியின் முந்தைய ஆட்சி காலத்தில் அனைத்து பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்தார். உடல் நலக் குறைவு காரணமாக 2019 இடைக்கால பட்ஜெட்டை மட்டும் அவருக்கு பதில் நிதித்துறைப் பொறுப்பு வகித்த பியூஷ்கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தாக்கல், பட்ஜெட் தாக்கல்செய்வதை பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றியது என அவர் நிதித்துறை அமைச்சராக பதவிவகித்தக் காலத்தில் மிகப்பெரிய கடினமான முடிவுகளை அறிவித்து, நிலைமையை சரியாக கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில பாரதிய மாணவர் அமைப்பில் மாணவர்கள் தலைவராக இருந்த அருண்ஜேட்லி, இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்ட முக்கியத்தலைவர்களில் ஒருவர். 19 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த அருண் ஜேட்லி பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம்பயின்றார். வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கிய அருண் ஜேட்லி, இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மத்திய அரசின் வழக்குரைஞராக பதவி வகித்தவர் என்ற பெருமையை வி.பி. சிங் ஆட்சிகாலத்தில் பெற்றார்.
1999ம் ஆண்டு பாஜக பதவிக்கு வந்த போது, சட்டத்துறை அமைச்சராகவும், மத்திய வர்த்தகத்துறை அமைச்சராகவும் பதவிகளை அலங்கரித்துள்ளார்.
அருண் ஜேட்லி பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்தபோதுதான் மோடியுடன் நெருக்கம் ஏற்பட்டது.
2004ம் ஆண்டு பாஜக ஆட்சியை இழந்தபிறகு, ஒரு எதிர்க்கட்சியாக பாஜகவை முன்னிலைப் படுத்தியவர் அருண்ஜேட்லி. கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். அந்த சமயத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவரது பேச்சு நிதானமாகவும், ஒவ்வொரு வார்த்தையையும் வலிமைமிகுந்ததாக எடுத்துவைத்த விதம் அவை உறுப்பினர்களை மட்டுமல்ல, பொதுமக்களையும், ஊடகங்களையும் வெகுவாகவே கவர்ந்தது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி மிகச் சிறந்த பணியை மேற்கொண்டார்.
அந்த அனுபவமே, மோடியின் ஆட்சி மத்தியில் அமைந்தபோது, அரசு எடுக்கும் மிகமுக்கிய கொள்கை முடிவுகளின் போது எதிர்க்கட்சியினர் தொடுக்கும் பல்வேறு கேள்விக் கணைகளையும் அவர் அதே பொறுமையுடன் எதிர்கொண்டு சாமர்த்தியமாக பதில்அளிக்கும் திறமையைக் கொடுத்தது.
பாஜகவுக்கு அமித்ஷாவுக்கு முன்பிருந்தே ஒருசாணக்கியராக திகழ்ந்தவர் அருண் ஜேட்லி என்றே அரசியலை உற்று கவனித்து வருவோர் கூறுகிறார்கள்.
ஊடகங்களைப் பொறுத்தவரை அருண்ஜேட்லி வெகு எளிதாகக் கையாளக் கூடியவரகாவும், அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து தகவல்களை பரிமாறிக் கொள்பவராகவுமே இருந்துள்ளார். தனது கட்சியின்கருத்தை, மத்திய அரசின் நிலைப்பாட்டை ஊடகத்தினருக்கு எளிதாகவிளக்கி, அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையோடு பதில்சொல்லும் விதம் வேறு எந்த தலைவருக்கும் வாய்க்கப்பெறாத திறனாகவே இதுவரை கருதப்படுகிறது.
ஒரு சிறந்த பேச்சாளரான, எழுத்தாரான அருண் ஜேட்லி எப்போதுமே தன்னை ஒரு மிகப்பெரிய தலைவர் போல காட்டிக் கொண்டதில்லை,
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |