G7 மாநாட்டிர்க்கு தலமைதாங்குகிறது பாரதம்

G7 மாநாட்டில் உறுப்புநாடாக இந்தியா இல்லை என்றாலும் தாங்கள் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்று பிரதமர் மோடிஜிக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்.

G7 நாடுகளில் ரஷ்யா மற்றும் சீனா கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பொருளாதார சக்திவாய்ந்த நாடுகள் உள்ளன.

வளர்ச்சி பெற்று வரும் மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று G7 மாநாட்டில் இந்தியா முக்கியமான இடத்தை வகிக்கிறது.

வரலாற்று நாயகர் மோடிஜி

இதில் முக்கியமாக ஐநா சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர்பதவி, அடுத்து ஜி -7 நாடுகளின் அமைப்பில் இந்தியாவை ஒரு அங்கமாக கொண்டுவர வேண்டும் . என்று இந்த 7 வல்லரசுகளும், மற்றும் ரஷ்யாவும் நினைக்கிறது. ஆனால் சீனா மட்டும் எதிர்ப்புதெரிவிக்கிறது

மேலும் இந்தியாவைஜி -7 அமைப்புக்குள் கொண்டுவர வைத்து அந்த அமைப்பை ஜி-8 ஆக மாற்ற வேண்டும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நினைக்கிறார்.

ஜி-7 நாடுகளின் அமைப்பில் இந்தியா நுழைவதன் மூலமாக எதிர்காலத்தில் இந்தியாவின் அடையாளம் நிச்சயமாக மாறிவிடும். வளர்ந்த நாடுகள் என்கிற பெயரை இந்தியா பெற்றுவிடும்.
இதன் மூலமாக ஐநா சபையில் நிரந்நர உறுப்பினர் என்கிற இந்தியாவின் கனவும் விரைவில் நனவாகும்.

ஜி -7 அமைப்பு என்றால் என்ன

ஜி-7 என்பது முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், ஏழுநாடுகளை கொண்ட அமைப்பு. இதில், பிரான்ஸ் , அமெரிக்கா , ஜப்பான் , ஜெர்மனி , பிரிட்டன் , கனடா , இத்தாலி ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

சரியாக கூறவேண்டும் என்றால் அமெரிக்க நேச நாடுகளின் கூட்டமைப்பு என்று ஜி-7 அமைப்பினை கூறலாம்.உண்மையிலேயே இது அமெரிக்காவின் ஐடியாவின் மூலமாக உருவான
அமைப்புதான்.அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் சோவியத் யூனியனை உலகளவில் தனிமை படுத்த ஒரளவு பொருளாதார ரீதியில் வலிமையாக இருக்கும் நாடுகளை ஒன்றினைக்க விரும்பினார்.

1973 ல் மார்ச் 25 ல் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இங்கிலாந்து, ஜப்பான், மேற்குஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களை அழைத்து முதலாளித்துவ கொள்கைகளை உலகளவில் முன்னெடுத்து செல்ல அமெரிக்கா ஆலோசித்ததன் விளைவுதான் இந்த ஜி-7 அமைப்பு.

ஆரம்பத்தில்.1975 ல் ஜி-5 வாக செயல்பட ஆரம்பித்து அதற்கு பிறகு. 1976ம்ஆண்டில் இத்தாலியும் 1977 ல் கனடாவும் வந்து சேர்ந்ததால் ஜி-7 ஆக இந்த 7 நாடுகள்கொண்ட அமைப்பு பெயர் பெற்றது.

அந்த காலத்தில் உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக இருந்த சோவியத் யூனியனையோ அல்லது 8 வது பொருளாதார நாடாக இருந்த சீனாவையோ இந்தஅமைப்பின் உள்ளே ஜி-7 நாடுகள் அனுமதிக்காததன் முக்கிய காரணமே முதலாளித்துவ நாடுகளுக்கும் கம்யூனிச நாடுகளுக்கும் இருந்தபோட்டியே காரணம்.

ஆனால் 1991 ல் சோவியத் யூனியன் சிதைந்து ரஷ்யாவாக பரிணாமம் பெற்ற பிறகு உலகளவில் தன்னுடைய அடையாளத்தை காண்பிக்க விரும்பிய ரஷ்யா தொடர்ந்து .

ஜி-7 நாடு களின் தலைவர்களிடம் நாங்கள் கம்யூனிசம் கிடையாது. மக்கள் ஆட்சிதான் எங்கள் நாடு என்று சொல்ல 7 நாட்டு தலைவர்களும் ரஷ்யாவை 1998 ல் ஜி-7 அமைப்பில் சேர்த்து கொண்டதால் ஜி-8 நாடுகள் அமைப்பு உருவானது.

ஆனால் ரஷ்யாவுக்கு உக்ரைன் நாட்டுடன் இணைந்து இருந்த கிரிமியாவின் மீது ஆசைகள் வர உக்ரைன் நாட்டுக்கு அல்வாகொடுத்து ரஷ்யா, கிரிமியாவை அபகரித்து கொண்டதால் .

ஜி-7 நாடுகள் ஒன்று சேர்ந்து ஜி-8 அமைப்பில் இருந்து ரஷ்யாவை 2014 மார்ச் மாதம் வெளியேற்றினார்கள்.

காமெடி என்னவென்றால் 2014 ம்ஆண்டுக்கான ஜி-8 நாடுகளின் மாநாடு ரஷ்யாவில் தான் நடைபெற இருந்தது. ஆனால் அதற்குள்ளே அமெரிக்காவின் ஆலோசனைப்படி ரஷ்யாவை நீக்கி விட்டார்கள்.

ரஷ்யா ஜி-8 ல் இருந்து வெளியேறிய காலத்தில் தான் இந்தியாவின் பிரதமராக மோடி உலக அரங்கில் அடி எடுத்துவைக்கிறார்.

அப்பொழுதே மோடி ஜி-7 அமைப்பில் எப்படி யாவது இந்தியாவை நுழைத்து விடுவது என்று வைராக்கிய த்துடன் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.

மோடிஜி பிரதமராக வரும் பொழுது இந்தியா உலக பொருளாதார வரிசையில் 10 வது இடத்தில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் தீவிர முயற்சியினால் 6 வது இடத்திற்கு வந்துட்டது.

இந்தியாவுக்கு முந்தைய இடத்தில் அதாவது 9 வது இடத்தில் இருந்த இத்தாலி, 8 வது இட த்தில் இருந்த ரஷ்யா, 7 வது இடத்தில் இருந்த பிரேசில், 6 வது இடத்தில் இருந்த பிரான்ஸ், ஆகிய நாடுகளை ஓரங்கட்டி விட்டு இந்தியா இப்பொழுது 6 வது இடத்தில் இருக்கிறது. 5 வது இடத்தை கூட இந்தியா இங்கிலாந்திடம் இருந்து விரைவில் பெற்றுவிடும்.

உலகில் கோடீஸ்வரர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியா இப்பொழுது 3 வது இடத்தில் இருக்கிறது. இந்தியா ஜி-7 என்கிற முன்னேறிய நாடுகளின்அமைப்பில் நுழைவதற்கு இதுபோதுமே.

அது மட்டுமல்லாது ஜி-7 நாடுகளை போல இந்தியாவும் சோசலிச கொள்கைகளை ஓரம்கட்டி விட்டு முதலாளித்துவ கொள்கைகளையே முன்னெடுத்து வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...