புதிய இந்தியாவில் ஊழலுக்கு இடம் இல்லை

புதுஇந்தியாவில் யாராக இருந்தாலும் ஊழலுக்கு அனுமதி இல்லை என்றும், புதிய இந்தியா குறிப்பிட்ட சிலருக்காக அல்ல, ஒவ்வொரு இந்தியருக்குமானது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கேரளமாநிலம் கொச்சியில் நடைபெற்ற மலையாள மனோரமா நாளிதழின் கருத்தரங்கில், தில்லியில் இருந்தபடியே காணொளிகாட்சி மூலம் பிரதமர் பங்கேற்று பேசியதாவது:

பொதுவாழ்வில் ஒத்தகருத்துக்களை கொண்டவர்களுடன் பணியாற்றுவது பலவழிகளில் நன்மை தரும். தாம் இப்போது அப்படி ஒருசூழலில் இயங்கி வருகிறோம். ஆனால் ஒத்து கருத்துக்களை கொண்டிருக்காத தனிமனிதர்கள், அமைப்புகளுடன் தொடர்ந்து செயலாற்றுவதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆரோக்கியமான விமர்சனங்களை தாம் எப்போதும் வரவேற்பதாகவும், கருத்துமாறுபாடுகள் இருந்தாலும் சமூக நல்லிணக்கத்தை பேணுவது அவசியம் .

இந்தியா மிகவேகமாக மாறி வருவதாகவும், அது மக்களின் நலனுக்காகவே நடைபெற்றுவருகிறது. இப்போது புதிய இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. புதியஇந்தியா குறிப்பிட்ட சிலரை பற்றியது அல்ல, பொறுப்புள்ள அரசு மற்றும் பொறுப்புள்ள ஒவ்வொரு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது. புதியஇந்தியாவில் யாராக இருந்தாலும் ஊழலுக்கு இடமில்லை.

முன்பு பெரியகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பெரிய நகரங்களில் வசிப்போர், பெரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டன, புதிய இந்தியாவில் திறமை இருப்பவர்கள் இப்போது தங்களின் பெயரைபொறிக்க போதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு முடியாது என்று கருதப்பட்ட பலவிஷயங்கள் இப்போது நடைமுறை சாத்தியமாக்கபட்டுள்ளது .

வெறும் நான்கு சுவர்களை கட்டி, வீடுகள் என்ற பெயரில் ஏழைகளுக்கு கொடுக்க மத்தியஅரசு விரும்பவில்லை , வீடுகள் அற்ற ஒன்றரைகோடி பேருக்கு மிக துரிதமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது , மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் இல்லங்களை உருவாக்கவே அரசு பாடுபட்டு வருகிறது.

சமீபத்தில் பக்ரைன் சென்றபோதும், ஓமன், சவுதி அரேபிய சிறையில் இருந்த இந்தியர்கள் 250 பேர் விடுதலை செய்யப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்து பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...