இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவின் பேச்சுக்கு இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அயோத்தி-ராமர் கோயில் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், முஸ்லீம்களிடத்தில் காணும் அமைதி என்பது புயலுக்கு முன் அமைதி என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகதின் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நல்லகண்ணு பேசியுள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ராம கோபாலன் இது கம்யூனிஸத்தின் உண்மை சொரூபத்தை காட்டுகின்றது” என கூறியிருக்கிறார்,
கடந்த அறுபது ஆண்டுகளாக இந்த வழக்கு-நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கை விசாரித்த-நீதிபதிகளில் ஒருவர் முஸ்லீம். தொல்பொருள், தொல்லியல், ஆவணங்கலை சரிபார்க்கும் அனைத்து பிரிவுகளிலும் முஸ்லீம்கள் 40% இடம்பெற்றுள்ளனர் . அனைத்து சாட்சிகளையும் தீவிரமாக விசாரித்து ஆதாரங்களின் அடிப்படையில் அந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று அலகாபாத் உயர்-நீதிமன்றம் தீர்ப்பு-வழங்கியுள்ளது.
நீதிமன்றம் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது என நல்லகண்ணு கூறியுள்ளது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். முஸ்லீம்களை திசைத்திருப்ப நல்லகண்ணு முயற்சி செய்துள்ளார். நீதிமன்றம் சொல்வதை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என இதுவரைக்கும் பேசிவந்தவர் இன்று தனது நிலையை மாற்றி கொண்டிருக்கிறார்” என ராமகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.