தூரகிழக்கு வளர்ச்சிக்காக 7000 கோடி நிதியுதவி

இந்திய அரசுதரப்பு, ரஷ்யாவின் ‘ஃபார் ஈஸ்ட்’ (தூரகிழக்கு) பகுதிகளுக்கான வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் நிதியுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்க முன் வந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி, வெளியிட்டார்.

விலாடிவோஸ்டாக்கில் நடந்த 5வது கிழக்கு பொருளாதார ஃபோரமில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர்மேலும், “எனது தலைமையிலான அரசாங்கம், கிழக்கு ஆசியாவில் இருக்கும் தேசங்களுடன் ‘ஆக்ட்ஈஸ்ட்’ என்கிற கொள்கையின்கீழ் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் மூலம் ‘ஆக்ட் ஃபார் ஈஸ்ட் பாலிசி’-யில் பெரியமுன்னேற்றம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

எங்கள் நாட்டின் பொருளாதார வெளியுறவு விவகாரத்திலும் இந்த அறிவிப்பு புதியபரிமாணத்தைச் சேர்க்கும். நட்புடன் இருக்கும் பலதேசங்களின் வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றிடும்” என்று பேசினார்.

கிழக்குபொருளாதார ஃபோரம் என்பது, ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் வியாபாரம் வளரவும் முதலீடுகள் அதிகரிக்கவும் நடத்தப்படும் நிகழ்ச்சி.

பின்னர் பிரதமர் மோடி, அதிபர் விளாதிமிர் புடின் இணைந்துவெளியிட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா, இந்தியா இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும்வகையில், ரஷ்யாவின் விளாதிவோஸ்டாக் மற்றும் சென்னைக்கு இடையே நேரடி கப்பல் போக்கு வரத்து வசதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் வளர்ச்சிபெறும். விளாதிவோஸ்டாக்கில் இருந்து, சென்னை வழியாக, இந்தியாவுக்கு பெட்ரோலிய பொருட்கள் கிடைக்க உள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...