சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம்லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்ட பின்னர், பிரதமர் மோடியின் பேச்சு, பொதுமக்களின் ஆதரவு, விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
சந்திரயான்- 2 விண்கலத்தின் விக்ரம்லேண்டர் நேற்று(செப்.,7) அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறங்க இருந்தது. ஆனால், லேண்டர், நிலவின்தரையில் இருந்து 2.1 கி.மீ.,தூரத்தில் இருந்த போது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து காலை இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ””சந்திரயான் – 2 திட்டத்தின் வெற்றியில் இடையூறு ஏற்பட்டுள்ளதால், ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் மனம் உடைந்து விடக் கூடாது. புதிய விடியல், சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” என்றார்.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். காரில் ஏறுவதற்கு முன்பாக, இஸ்ரோ தலைவர், சிவனிடம், திரும்பி ஆறுதல்வார்த்தைகளை கூறினார்.அப்போது உணர்ச்சிவசப்பட்ட, சிவன், கண்ணீர் விடுவதைப் பார்த்த, பிரதமர் மோடி, அவரைக் ஆரத்தழுவி தோள்களை தடவி விட்டு, ஆறுதல் கூறினார். பிரதமரின் தோள்களில் முகத்தை புதைத்துக் கொண்டு, சிவன் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பிரதமர் மோடியின் பேச்சும், தேசத்தின் ஆதரவும் எங்களுக்கு மகிழ்ச்சியைகொடுத்தது. இது விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்தது. என்றார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் கூறுகையில், உற்சாகபடுத்தியும், இஸ்ரோவுக்கும் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஆதரவுதெரிவித்து பிரதமர் பேசியது பாராட்டுக்குரியது. இது எங்களை நெகிழசெய்துள்ளது. நாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது. பிரதமர் தனது பேசியவிதம் பாராட்டுக்குரியது. அவரது பேச்சு, உணர்ச்சிகரமாகவும், ஆழமான அர்த்தங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இதைவிட சிறந்த ஒன்றை நாம் எதிர்பார்க்க முடியாது. என்றார்.
இஸ்ரோவின் மற்றொரு முன்னாள்தலைவர் ஏஎஸ் கிரண் குமார் கூறுகையில், தேசத்திற்கும், பிரதமருக்கும் நாங்கள் கடமைப் பட்டுள்ளோம். நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில், பல சிக்கல்கள் இருந்தன. இதனை புரிந்துகொண்டு, ஆதரவு அளித்த நாட்டிற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஒட்டுமொத்த நாட்டிற்கும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |