மாற்றம் ஒன்றே மாறாதது

GST யை காரணம் காட்டி தொழிலை மூடியவன் ( முதலாளி ) எவனாவது ஓட்டு வீடுக்கு மாறி, கரை விற்று சைக்கிளில் போறானா? சும்மா பேத்தல். முன்னாடி ஒழுங்காக வரி செலுத்தாமல் கொழிச்சுட்டு, இப்ப அது குறைந்ததும் நஷ்டம்ன்னு மூடறது, வாங்கிய லோனை அடைக்காமல் ஓட முற்படுவது.

முன்பு ஒழுங்காக வரிகட்டாமல் வருடத்திற்கு 1 கோடி வந்திருக்கும், இப்போது ஒழுங்காக வரி கட்டியதும், அது பாதியாக குறைந்ததும், அதை நஷ்டமென்றா சொல்வீர்கள்?

சரி ஒழுங்காக வரி கட்டியும் ஒரு தொழிற்சாலையை மூடுவதற்கு பலகாரணங்களிருக்கும். அதையெல்லாம் ஒத்துக்கொள்ளாமக் ஜி.எஸ்.டி மேல் பழி போடுவது எந்தவிதத்தில் நியாயம்.

உதாரணத்திற்கு Parle கம்பெனி தனது மும்பை தொழிற்சாலையை மூடியதற்கு காரணம் ஜி.எஸ்.டி என்று கூறியிருக்கிறார். எங்கே அவர் அதை விளக்கமாக சொல்லச்சொல்லுங்கள். முடியாது. அப்படி ஜி.எஸ்.டி தான் காரணமென்றால் ஏன் மற்ற பிஸ்கட் கம்பெனிகள் மூடவில்லை?

பார்லே கம்பெனி தயாரிப்புகளில் மாற்றமே இல்லை. பல புதிய கம்பெனிகளும், பிரிட்டானியா கம்பெனியும் பலவிதமான புதிய பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இவர் இன்னும் Parle – G பிஸ்கட்டிலேயே இருந்தால் எங்கே வியாபாரம் நடக்கும். முன்பு Parle – G போதும் என்று இருந்தவனுக்கு வருமானம் அதிகமாகி விதவிதமான பிஸ்கட்டுகளை வாங்கி தன் குழந்தைக்களுக்கு கொடுக்கிறான். மனதைத்தொட்டு சொல்லுங்கள் நம்மில் எத்தனை பேர் பார்லே தயாரிப்புகளை வாங்குகிறோம்.

அட வீட்டிலேயே, தினமும் உப்புமா டிபன் கொடுத்தால் அதை மட்டுமே சாப்பிடுவீங்களா?

மக்களுடைய ருசி தெரிந்து மற்ற கம்பெனிகள் பலவித தயாரிப்புகளில் இறங்கி அசத்துகிறார்கள். இவர் இன்னும் 50 வருடத்தித்கு முந்தைய அதே பாக்கெட்டில் Parle – G மட்டும் தயாரித்தால் வண்டி ஓடுமா? சாக்லேட் கம்பெனியான காட்பரி ஓரியோ பிஸ்கட் கொடுக்கிறது.

இந்த கம்பெனியின் இந்த நிலைக்கு காரணம் மக்களின் ருசியை மதிக்காமல் இதுவே போதுமென்று இருந்ததுதான்.

முன்பு ஓடு தயாரித்த கம்பெனிகள் இன்று தரைக்கு டைல்ஸ் தயாரிக்கின்றன. வெறும் ஓடு மட்டுமே தயாரித்த கம்பெனிகள் ஓட்டான் சல்லியாகிப்பொபோயின.

புகழ் பெற்ற கோடக் கம்பெனி முதன் முதலில் டிஜிட்டல் ஃபோட்டோ முறைய கண்டு பிடித்தாலும் அதில் இறங்காததால் இன்று அவதி. நம்மில் எத்தனை பேர் இன்று ஃப்லிம் வாங்கி காமெராவில் படம் எடுக்கிறோம். ?

அதேபோல்தான் ஆட்டோமொபைல் தொழில்களும். Recession என்பது மோட்டார் தொழில்களில் ஏற்படுவது சகஜம். முன்பும் இதுபோல் நடந்திருக்கின்றன.

ஸ்டாண்டர்ட் கார் தொழிற்சாலை ஏன் மூடப்பட்டது? மாருதி போன்ற புதிய சிறிய கார்கள் அறிமுகப்படுத்தியதால்தானே. இதையே ஸ்டாண்டர்ட் நிறுவனம் செய்திருந்தால் மூடவேண்டிய அவசியமிருந்திருக்காது. அன்று மாருதி கார் தொழிற்சாலையை கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு. நாம் Consumers. நமக்கு விலை குறைவான மாருதி கார் கிடைத்தவுடன் அதைத்தானே வாங்குவோம். அதற்காக காங்கிரஸ் அரசை குறைகூறினோமா என்ன?

மனைத்தொட்டு சொல்லுங்கள், எதிர்காலத்தில் மின்சார/ பாட்டரிகார்கள் அறிமுகமாகப்போகிறது என்று தெரிந்தபிறகு எத்தனை பேர் பெட்ரோல் / டீசல் கார் வாங்குவீர்கள்.? அதுவரை பழையகாரை வைத்து ஓட்டினால் போதுமென்றுதானே நினைப்பீர்கள்? நம் தேவையை நாம் குறைத்துக்கொள்ளும்போது கார்கள் விற்பனை குறையத்தான் செய்யும். கம்பெனிகள் என்ன செய்ய வேண்டும்? மாற்றத்திற்கு தயாராக வேண்டும். இல்லையேல் ஸ்டாண்டர்ட் கார் கம்பெனிபோல் காணமல்தான் போவார்கள்.

முன்பு துணி மட்டும் தயாரித்த கம்பெனிகள் என்னவாயிற்று? உதாரணத்திற்கு பின்னி மில்.

ஆயத்த ஆடைகள் வந்தவுடன் நம்மில் 80% ஆயத்த ஆடைகள்தானே வாங்குகிறோம்.

ஹோட்டக்களில்கூட ஒரு இடத்தில் Fast food court வத்திருக்கிறார்கள்.

உலகம் இப்போது எதிலும் Fast என்று இருக்கும்போது நாம் மெதுவாக நடந்தால் பின்னால் வேகமாக வருபவன் நம்மை இடித்து தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பான்.

இனி அடுத்து ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால் போதும் ஆயிரம் கி.மீ வரை ஓடக்கூடிய பேட்டரிகள் வரப்போகின்றன.

Excise போன்ற பாட்டரி கம்பெனிகள் அதற்குத்தயாராக தம்மை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

நாம் பயனாளிகள். நமக்குத்தேவையான ஒன்று சந்தையில் கிடைக்கும்போது அதைத்தானே வாங்குவோம். தொழிற்சாலைகள் காலத்தின் மாற்றத்திற்கேற்ப, மக்களுக்கு தேவையானவற்றை தயாரித்து தரவில்லையென்றால் மூடவேண்டியதுதான்.

அரசாங்கத்தை முற்றிலும் குறைகூறுவது தவறு. அரசாங்கம் நல்ல சூழ்நிலையை உருவாக்கித்தரத்தான் முடியும். சந்தையில் நிலைத்து நிற்பது அவரவர் திறமையை பொறுத்தது.

ஆசிரியர் பாடம் நடத்துவார், நாம் தான் பரீட்சை எழுதணும் தேற வேண்டும் முன்னேற வேண்டும்.

எனவே மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை புரிந்துகொள்ளவேண்டும், எந்த அரசாங்கம் வந்தாலும் தொழில்களில் மாற்றம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். மாற்றங்களினால் ஒரு தொழிலை மூடினால் அரசாங்கம் பொறுப்பாகாது.

வெங்கட்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...