பாராளுமன்ற தேர்தலுக்குபிறகு மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்டம் கண்டு வருகிறது. அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில், திரிணாமூல் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வந்தவர் சப்யாசச்சி தத்தா. ராஜார்ஹர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் கடந்த சிலமாதங்களாக கட்சி செயல்பாடுகளை விட்டு சற்று விலகியே இருந்தார்.
இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று கொல்கத்தா வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சப்யாசச்சி தத்தா உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.
மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட சபியாசாச்சி தத்தா பாஜக-வில் இணைந்தது திரிணாமூல் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |