இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வங்காள பிரதமர் ஷேக் ஹசீனாவும், இரு நாடுகளின் நன்மைக்காக கலந்துரையாடி, வர்த்தகம், கலாச்சாரம், போக்குவரத்து என்பது போன்ற 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் செப் 27., அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுசபை மாநாட்டில் கலந்துகொண்ட இரு தலைவர்களும், இருநாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்துரையாடி, சிலவர்த்தக ரீதியான ஒப்புதல்களில் கையெழுத்திட முடிவு செய்திருந்தனர். இதன்தொடர்ச்சியாக, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த வியாழனன்று நடைபெற்ற, சர்வதேச பொருளாதார அமைப்பின், இந்தியபொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து, தற்போது, இருநாடுகளும், 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.
மேலும், இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியிருப்ப வர்களை அடையாளம்கண்டு வெளியேற்றிட உதவிடும்வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானது தான் எனவும், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்திடவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |