பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரிடையே மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற முறைசாரா சந்திப்பு நேற்று மதியம் நிறைவு பெற்றது. அதையடுத்து, இரு தலைவர்களும் சென்னையிலிருந்து புறப்பட்டுச்சென்றனர். இந்திய – சீன எல்லைப் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய டோக்லாம் என்ற இடத்தில் சீனா சாலை அமைப்பதற்கு இந்தியா கடும்எதிர்ப்பு தெரிவித்தது. அது, இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த பதற்றத்தைத் தணிப்பதற்காக கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் மோடியும் ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினார்கள். அது ஒருமுறைசாரா சந்திப்பு. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவதென்று முடிவானது. அந்தச் சந்திப்புக்கான இடம் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்தச் சந்திப்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, சந்திப்பு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக சீனா வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குத் தனி விமானத்தில் வந்திறங்கினார் ஜின்பிங். அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு பாரம் பர்ய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட ஜின்பிங், கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்குச் சென்றார். அங்கிருந்து, மாலை 4 மணியளவில் மாமல்லபுரத்துக்கு சாலை வழியாக காரில் சென்றார். இந்தச் சந்திப்புக்காக மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தைக்கு வந்தார் பிரதமர் மோடி. கோவளத்தில் உள்ள தாஜ் ஃபிஷர்மென் கோவ் என்ற நட்சத்திர விடுதியில் தங்கினார். ஜின்பிங் மாமல்லபுரம் வந்ததும் அவரை மோடி வரவேற்றார். இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டனர். தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டிசட்டை, துண்டு அணிந்திருந்தார் பிரதமர் மோடி. கோட், டை அணியாமல் பேன்ட் சட்டை அணிந்து கேஷுவலாகக் காட்சியளித்தார் ஜின்பிங். இருவரும் நடந்தவாறே அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை ரசித்தனர். அந்தச் சின்னங்கள் குறித்து ஜின்பிங்குக்கு மோடி விளக்கினார். பிறகு, அங்கு நாற்காலிகளில் அமர்ந்து இருவரும் இள நீர் அருந்தினர். பிறகு மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு இருவரும் சென்றார்கள். அங்கு நடைபெற்ற பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். இரவு உணவுமுடித்த பிறகு ஐ.டி.சி கிராண்ட் சோழா விடுதிக்கு ஜின் பிங் திரும்பினார். இன்று காலையில், மோடி தங்கியிருந்த தாஜ் ஃபிஷர்மென் கோவ் நட்சத்திர விடுதிக்கு கிண்டியிலிருந்து காரில்வந்தார் ஜின்பிங். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாஜ் ஃபிஷர்மென் கோவ் விடுதியில் ஜின் பிங்கை வரவேற்றார் மோடி. கூட்டம் நடைபெற்ற அரங்கத்துக்கு இருவரும் பேட்டரி காரில் சென்றனர். ஜின்பிங்குக்கு அவரின் முகம் பதித்த பட்டு சால்வையைப் பரிசாக வழங்கினார் மோடி. பின்னர், இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இந்தியத் தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே உடன் இருந்தனர். அதேபோல, சீனா தரப்பில் அந்நாட்டு அதிகாரிகள் உடன் இருந்தனர். சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதுகுறித்து சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே விளக்கினார். இதை ஒரு வெற்றிகரமான சந்திப்பு என்றே சொல்லலாம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் இருந்துவந்த இறுக்கம், வூஹான் சந்திப்பால் சற்றுதளர்ந்தது. தற்போதைய சந்திப்புக்குப் பிறகு, இரு நாட்டு உறவில் மேலும் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொடாமல் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் பற்றாக் குறையைச் சரி செய்வது, இரு நாட்டு மக்களிடையேயான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்துவது, கலாசார ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவது எனப் பேசப் பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக் குறையைக் களைவதற்கு சீனாவின் துணை அதிபர் மற்றும் இந்திய நிதியமைச்சர் ஆகியோர் கொண்டகுழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த முறைசாரா சந்திப்பு இன்னும்தொடரும். அதற்கான சந்திப்புக்காக சீனாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். மோடியும் சீனா வருவதாக மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார்
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |