மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி குறும்படம் வெளியிட்டார். தலை நகர் தில்லியில் சனிக் கிழமை மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியை சிறப்பிக்கும் விதமாக குறும் படம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், அமீர் கான், கங்கனா ரணாவத், சோனம் கபூர், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், போனி கபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அதில் பேசியதாவது,
மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்த அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அவருடைய போதனைகளை பரப்புவதில் திரைத் துறை பெரும்பங்காற்றி வருகிறது. 1947 வரையிலான சுதந்திரப் போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |