பாடப் புத்தகங்களில் இருந்து திப்புசுல்தான் தொடர்பான அனைத்து பாடங்களும் நீக்கப்படும்

திப்பு சுல்தானை சுதந்திரபோராட்ட வீரர்போல் சித்தரித்து தவறான வரலாற்று தகவல்கள் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ.வான அப்பாச்சு ரஞ்சன் கல்விய மைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

தமது ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்யவும் மக்களை மதம் மாற்றவும் தான் திப்புசுல் தான் குடகு, மங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வந்ததாகவும், கன்னட மொழிக்கும் திப்புசுல்தான் மரியாதை காட்டவில்லை என்றும், பாரசீக மொழியையே அவர் தமது ஆட்சி மொழியாக பயன் படுத்திய தாகவும் ரஞ்சன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

மடிகேரி என்ற பெயரை ஜாபரா பாத் என்றும், மங்களூரை ஜலாலாபாத் என்றும் திப்புசுல்தான் பெயர் மாற்றிய தாகவும், இந்து கோவில்கள் மற்றும் கிறித்துவ தேவாலய சொத்துகளை பறித்து சூறையாடி யதாகவும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மதம் மாற்றியதாகவும் தமது கடிதத்தில் தெரிவித்திருந்த பாஜக. எம்.எல்.ஏ., ஓட்டு அரசியலுக்காக திப்புசுல்தானை பெரிய ஹீரோவாக்கி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் அடிப்படையில் 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாடநூல் நிறுவனத்திற்கு கல்வியமைச்சர் உத்தர விட்டிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, பாடப் புத்தகங்களில் இருந்து திப்புசுல்தான் தொடர்பான அனைத்து பாடங்களும் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார். திப்புசுல்தான் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதை ஏற்க முடியாது என்றும், திப்பு ஜெயந்தி நிகழ்ச்சி இனி ரத்து செய்யப்படும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...