எதிர் காட்சிகளை விட ஐரோப்பிய யூனியன் எம்பி.,க்கள் எத்தனையோ படி மேல்

சமீபத்தில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 27 பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை நேரில் சென்று கல ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதித்தது. அங்கு இராணுவம் பொது மக்களை சுட்டு தள்ளுகிறது. மக்கள்   வீட்டு சிறையிலேயே முடக்கப் பட்டுள்ளார்கள், வன்முறை என்றாலே என்ன வென்று அறிந்திடாத மாநிலம் இன்று வன்முறை காடாகி விட்டது, என்று உள்நாட்டிலேயே சில அறிவு ஜீவிகள், அரசியல் காட்சிகளின்  வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் முகமாக இநத அனுமதி தரப்பட்டது .

ஆனால் அதுவும் சர்ச்சையாக்க பட்டது. பாகிஸ்தானிய  மனோ பாவத்துடனே   பேசிவரும்  இங்குள்ள   காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும், ஒரு சில பத்திரிக்கைகளும். இந்தியாவுக்குள்  மூன்றாம் உலக நாடுகளின் தலையீட்டைஎப்படி அனுமதிக்கலாம்?, எதிர்க்கட்சிகளுக்கு கூட இல்லாத அனுமதி அவர்களுக்கா?,  இந்த பயணத்தை ஒருங்கிணைத்த மாடி சர்மா யார்?, அவரது என்.ஜி.ஓ,.க்கு இங்கு என்ன வேலை என்றெல்லாம் கேள்வி கணைகளை தொடுத்து வருகிறது.

ஏன் என்றால்  ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதை எதிர்க்க வில்லை. பிரிவினை வாதிகளின் எண்ணங்களை பிரதிபலிக்க வில்லை. காஸ்மீர் அப்துல்லாக்களின் மனோபாவத்துடன் பேசவும் இல்லை, இந்திய இறையாண்மைக்கு மதிப்பளித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஒரு வித நெருக்கடியையும்  தந்துள்ளனர்.

அதாவது காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.  நாங்கள் தலையிட முடியாது. நிலையில்லாத தன்மையும், பயங்கரவாதமும் தான் இங்கு  பெரிய பிரச்னை.  பயங்கரவாதம் இந்தியாவின் பிரச்னை மட்டும் அல்ல. அது உலகின் பிரச்னை.காவல் துறையையும், ராணுவத்தையும் கடந்து பாகிஸ்தான்  தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்புகிறது. இவை காஷ்மீரை இன்னும் பின்னுக்கு தள்ளுகிறது. மற்றொரு ஆப்கான் உருவாவதை நாங்கள் விரும்ப வில்லை.

காஷ்மீரின் சாமானிய மக்களை சந்திக்கவே வந்தோம். அவர்கள் பள்ளிகளையும் , மருத்துவ மனைகளையும்,  வளர்ச்சியையும் அமைதியையுமே விரும்புகிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் துணைநிற்போம் என்றே பேசியுள்ளனர்.

இப்படி எல்லாம் இங்குள்ள எதிர் கட்சிகள் பேசுவார்களா அல்லது நடந்துதான் கொள்வார்களா?. சமீபத்திய காங்கிரஸ், திமுக.,வின்  காஸ்மீர் குறித்த கருத்துக்களும், நடவடிக்கைகளும் பாகிஸ்தானின் கரத்தை அல்லவா  வலுப்படுத்தின . ஐநா சபை வரை பாகிஸ்தானுக்கு   ஆதாரமாக அல்லவா பயன்பட்டன. எதிர்க்கட்சிகள் காஸ்மீர் செல்வதில் எந்த தடையும் இல்லை ஆனால் அவர்கள் அங்கு சென்று அமைதியாக உள்ள 90 சதவீத இடங்களை கண்டு அமைதி கொள்வார்களா என்றால், பத்து சதவீதம் அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதிகளுக்கு சென்று போராடி நிலைமையை மேலும் சிக்கலாக்குவார்கள் என்பதே நிதர்சனம். ஆக மொத்தத்தில் 27 எம்.பி.,க்களின் காஸ்மீர் பயணம் இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என்றே கூற வேண்டும்.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திமுக அரசின் அடக்கு முறை -அண்ணா ...

திமுக அரசின் அடக்கு முறை -அண்ணாமலை கண்டனம் ஏ.பி.வி.பி., மாணவர்களை அவர்களின் அலுவலகத்திற்குள் நுழைந்து கைது செய்ததற்கு ...

மாணவி பாலியல் வழக்கு விசாரணை செ ...

மாணவி பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் சந்தேகம் – அண்ணாமலை '' அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பாரதம் என்றென்றும் நினைவில் கொள்ளும் – மோகன் பகவத் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை இந்த பாரதம் ...

2025க்குள் அனைத்து கிராமப்புற வீட ...

2025க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் தனி குடிநீர் இணைப்பு- மத்திய அரசு இலக்கு 'நம் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், அடுத்த ...

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் ...

மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார் டில்லியில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் ...

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்ப ...

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் முதன்மை பணி – பிரதமர் மோடி 'இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் முதன்மையான பணி' என ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...