‘இந்திய தேர்தல், ஆரோக்கியமும், ஜனநாயகமும் மிகுந்த தேர்தல்,’ என ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஓட்டுப்பதிவை பார்வையிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் இன்று 2வது கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை காண, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாட்டு பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களை இந்திய வெளியுறவுத்துறை வரவேற்றது.
அவர்கள், தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். வாக்காளர்கள் மத்தியில் நிலவும் உற்சாகம், வேட்பாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கண்டறிந்தனர்.
பார்வையாளராக வந்திருந்த அமெரிக்க குழு துணை தலைவர் ஜோர்ஹன் ஆண்ட்ரூஸ் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை நேரில் காணும் போது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. தேர்தல் முடிவுகளை காணவும் ஆர்வம் மிகுதியாக உள்ளது.
இதை காணும் போது இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள், மிகவும் ஆரோக்கியமாகவும், மிகுந்த ஜனநாயகத்தை கொண்டதாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.கொரியா நாட்டு பிரதிநிதி சாங் வூ கூறுகையில், ”இளஞ்சிவப்பு (பிங்க் நிறம்) ஓட்டுச்சாவடியில் செயல்படும் நிர்வாகிகள் அனைவரும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி அளித்த இந்திய தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்கள்.
காஷ்மீருக்கு நாங்கள் வந்தது இது தான் முதல் முறை. வெளிநாட்டு பிரதிநிதியாக இங்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள இடங்கள் மிகுந்த அழகாகவும், மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாகவும் உள்ளனர்,” என்றார்.
சிங்கப்பூர் பிரதிநிதி செங் வீ வீ ஆலிஸ் கூறுகையில், ”நான் இங்கு ஓட்டு போடுபவர்களை பார்த்தேன். சிங்கப்பூரில் இதே மாதிரி நடைமுறையை கொண்டு வர முயற்சிப்போம். இங்குள்ள அரசு கட்டிடங்களை ஓட்டுச்சாவடிகளா பயன்படுத்துவது, அது வாக்காளர்கள் எளிமையாக பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருந்தது,” என்றார்.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |