பாராளுமன்ற தேர்தலில் தமாக. தமிழகத்தில் அதிமுக.-பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தஞ்சை தொகுதியில் போட்டியிட்டது.
த.மா.கா. தலைவர் ஜிகே.வாசன் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம்செய்தார். அதன்பிறகு நடந்த இடைத் தேர்தல்களிலும் இந்த கூட்டணியை ஆதரித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்திய அரசு திட்டங்களையும், தமிழக அரசையும் ஆதரித்துவருகிறார். சமீபத்தில் சீன அதிபரை சந்திப்பதற்காக சென்னைவந்த பிரதமர் மோடியை ஜிகே.வாசன் நேரில்சென்று வரவேற்றார். அப்போது தன்னை டெல்லியில் வந்து சந்திக்கும்படி மோடி அழைப்பு விடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதற்கிடையே ஜிகே.வாசனை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. தற்போது தமிழக பா.ஜனதாவில் தலைவர்பதவி காலியாக உள்ளதால் த.மா.கா.வை பா.ஜனதாவுடன் இணைத்து ஜி.கே.வாசனை தலைவராக்க அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் ஜி.கே.வாசன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியைஇந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது .
பின்னர் ஜிகே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-அதிமுக. கூட்டணியில் சேர்ந்தோம். நடந்துமுடிந்த அந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோகவெற்றியை பெற்றது. மோடி மீண்டும் பிரதமர் ஆனார்.
அவரது தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் போய்சேருகிறது. பிரதமர் ஆனபிறகு மோடியை சந்திக்க விரும்பினேன். அதன்படி இன்று அவரது இல்லத்தில் அவரை சந்திதேன்.
இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரம் பற்றி பேசினேன். தமிழ் நாட்டின் அரசியல் தற்போதைய மக்கள் மன நிலை ஆகியவற்றை பிரதமரிடம் எடுத்துக்கூறினேன். அப்போது அவர் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தேன்.
பாராளுமன்ற தேர்தலுக்குபிறகு தமிழக மக்களிடம் மன மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக.- பா.ஜனதா கூட்டணி அதிகவாக்குகளை பெற்றது. அதன்பிறகு நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது மக்களின் மனமாற்றத்தைதான் காட்டுகிறது.
அதிமுக. – பா.ஜனதா கூட்டணிமீது தற்போது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது அடுத்துவரும் தேர்தல்களிலும் தொடரும். இதுபற்றியும் பிரதமரிடம் தெரிவித்தேன்.
தொடர்ந்து இந்த கூட்டணியில் தமாக. நீடிக்கும் தனித்தன்மையுடன் செயல்படும். நடைபெற இருக்கும் உள்ளாட்சிதேர்தலிலும் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைபெறும். தமாக. சிறப்பாக வளர்ந்துகொண்டு இருக்கிறது.
கேள்வி:- த.மா.கா. பா.ஜனதாவுடன்இணையப் போவதாகவும், நீங்கள் தமிழக பா.ஜனதா தலைவர் ஆகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதே?
பதில்:- அதுவெறும் யூகச் செய்தி. பரபரப்புக்காக சிலர் இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நானும்பிரதமரும் 20 நிமிடங்கள் தனியாகபேசினோம். வேறுயாரும் அங்கு இல்லை. தற்போதைய இந்தியஅரசியல், தமிழக அரசியல் பற்றிமட்டுமே பேசினோம்.
3-வது நபர் யாரும் கிடையாது. எனவே, பா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்று எந்தசெய்தி வந்தாலும் அதுவெறும் யூகம்தான். உண்மை கிடையாது. த.மா.கா. தனித்து செயல்படும்.
கேள்வி:- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பீர்களா?
பதில்:- அவரை சந்திக்கவிரும்புகிறேன். தற்போது மராட்டிய மாநில ஆட்சி பற்றிய பிரச்சினையை தீர்ப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். எனவே இப்போது அவரைசந்திக்க முடியவில்லை. அடுத்தவாரம் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.
பிரதமருடன் நடந்தசந்திப்பில் பொதுவான அரசியல் விஷயங்கள் மட்டுமே பேசப்பட்டன. வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதை தெரிவிக்கிறேன். த.மா.கா. தற்போதைய கூட்டணியில் தொடரும். தனித் தன்மையுடன் எங்கள் கட்சி செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |