"மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் ",இது மார்கழி மாதம் ,ஆண்டாள் பாவை நோன்பு தொடங்கிய தினம் பௌர்ணமி என்பதால் 'மதி நிறைந்த நன்னாளாம் '.என்று ஆண்டாள் பாடியசிறப்பு மிக்க மாதம்.
மார்கழி மாதம் பூஜை ,பஜனை என்று தெய்வீகம் கமழும் மாதம் இது. இந்த மாதம் தெய்வத்திற்குரிய மாதம் என்று மக்களால் கொண்டப்படுக்கிறது. இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு பூஜை,பஜனை,வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். புராணங்கள் தேவர்களுக்கு ஓராண்டு ஒருநாள் என்றும் , உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும். வடக்கு நோக்கிப்போகும் ஆறு திங்களைத் தட்சணாயனம் எனவும் வழங்குகிறது.வட முனையில் தட்சணாயனமே இரவுக் காலம்உத்தராயணமே பகற்காலம்.தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் ,ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும் கூறுகிறோம்.தேவர்களின் மாதமான இந்த மாதம் பொழுது விடிவதற்கு முந்தைய நேரத்தை 'பிரம்ம முகுர்த்தம் 'என்றும் ,'உஷத் காலம் 'என்றும் சொல்கிறோம்.
இவ்வாறு தேவர்களின் பிரம்ம முகுர்த்தம் மார்கழி மாதம் தான். சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் இது தனுர் மாதம் என்றும் அழைக்கப்படும். பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூட ,'மாதங்களில் நான் மார்கழி 'என்று கூறுவார். அத்தனை சிறப்புமிக்க மாதம் மார்கழி.
மார்கழி திங்கள் , மார்கழி மாதத்தின் , மார்கழி மாதம்
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.