மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது

288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்ட சபைக்கு நடந்ததேர்தலில் பா.ஜ.க. -105, சிவசேனா-56, தேசியவாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றிபெற்றன.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள்தேவை என்ற நிலையில் பாஜக.வும், சிவசேனாவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இந்த தடவை முதல்மந்திரி பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பாஜக.வுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதனால் பா.ஜ.க.வுக்கும், சிவசேனாவுக்கும் புதிய அரசு அமைப்பதில் ஒருமித்தகருத்து ஏற்படவில்லை.

இதற்கிடையே, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் ந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து அளித்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும்வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சிஅமைக்க பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்தார்.

சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பா.ஜ.க. என்பதால் ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்புவிடுத்துள்ளார். மேலும், சட்டசபையில் நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்படி, இன்றுமாலை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டில் ‘மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்க போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.

பாஜக-சிவசேனா கூட்டணி இங்கு மீண்டும் ஆட்சிஅமைக்க வேண்டும் என்பதற்காகதான் மகக்ள் எங்களுக்கு வாக்களித்தனர். ஆனால், பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிக்காமல் மக்களின் தீர்ப்பை அவமதிக்கும்வகையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா நினைத்தால் அந்தமுயற்சிக்கு எங்களது நல்வாழ்த்துகள் எனவும் சந்திரகாந்த் பட்டில் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...