அதனால் அவர்கள் இணைந்துள்ளனர். அவர்களுக்கு என்று ஒருகொள்கை இல்லை. அஜித் பவார் எங்களுக்கு ஆதரவு அளித்ததை தவறு என்றோ, தவறானகணிப்பு என்றோ சொல்லலாம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லமாட்டேன். சரத் பவாரும் எங்களை ஏமாற்றவில்லை.
சரியாக சொல்லப்போனால் என்சிபியும் எங்களை ஏமாற்ற வில்லை. என்சிபி எங்களை எப்போதும் எதிர்த்து இருக்கிறது. ஆனால் எங்களை உத்தவ் தாக்கரேதான் எங்களை ஏமாற்றி உள்ளார். சிவசேனா கட்சி தான் எங்களை ஏமாற்றி இருக்கிறது. சிவசேனா எங்களுடன் தான் இணைந்து போட்டியிட்டது.
ஆனால் மக்களை மதிக்காமல் அவர்கள்கூட்டணி மாறியுள்ளனர். இதுபோன்ற சமயங்களில் தொண்டர்கள் கோபம் அடைவார்கள். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
ஆனால் அதைபற்றி நான் இப்போது பேசமாட்டேன். நாங்கள் எப்போது சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை தருவோம் என்று கூறவே இல்லை. ஆனால் சிவசேனா பொய்சொல்கிறது. அவர்களுக்கு மக்கள் பாடம் கற்றுத்தருவார்கள்.
அஜித்பவாருக்கு எதிரான வழக்கு அவர் எங்களுடன் இருந்தாலும் தொடர்ந்து இருக்கும். அது உறுதி. நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். யார் கொள்கைமாறி கூட்டணி வைத்தது என்று மக்களுக்கு தெரியும், என்று அமித் ஷா கோபமாக குறிப்பிட்டுள்ளார்.