9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமானவீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம்

தனது அரசு கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமானவீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிராவின் புனே நகருக்கு வருகை தந்தவருக்கு லோகமான்ய திலகர் தேசியவிருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் அம்மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய பிரதமர் மோடி, “தனிப்பட்ட முறையில் நினைவுகூரத்தக்க நிகழ்வு இது. நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன். பால கங்காதர திலகர், சுதந்திர போராட்டத்தின் திலகமாகத் திகழ்பவர். பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியவர் திலகர். நாட்டில் நிகழும் போராட்டங்களுக்கு எல்லாம் தந்தையாக இருப்பவர் பாலகங்காதர திலகர் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை கருதினர்.

விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற அவரது பெயரிலான விருதைபெற்றதை கவுரவமாகக் கருதுகிறேன். வெளிநாட்டு ஊடுருவல் காரர்களின் பெயர்கள் மாற்றப்படுவது சிலருக்கு ஏற்கத்தக்கதாக இருப்பதில்லை. இளம் திறமையாளர்களை அடையாளம் காண்பதில் லோகமான்ய திலகர் சிறந்துவிளங்கினார். அதற்கு வீர சாவர்க்கர் ஒரு உதாரணம். வீர சாவர்க்கரின் திறமையை நன்குஅறிந்தவராக திலகர் இருந்தார்.

இந்தியாவின் பயணம் என்பது நம்பிக்கை பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து உபரிநம்பிக்கை என்ற நிலைக்கு வந்திருக்கிறது. உபரி நம்பிக்கை என்பது கொள்கைகளிலும், மக்களின் கடினஉழைப்பிலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நம்பிக்கை இல்லாத இடத்தில் வளர்ச்சிக்கு இடம் இருக்காது. தற்போது நாட்டு மக்களிடையே நம்பிக்கை அதிகரித் திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மக்கள் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக நாட்டை அவர்கள் உயர்த்தி இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

புனே நகரின் இரண்டு வழித்தடங்களில் கட்டிமுடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பின்னர், சிவாஜி நகர் காவல்துறை தலைமையகத்தில் வீடுகட்டும் திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “புனே நகரில் வாழும் நடுத்தரமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் அரசு மிகவும் தீவிரமாக இருக்கிறது. இதைகருத்தில் கொண்டே ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வீடுகட்டும் திட்டத்திற்கான அடிக்கல் தற்போது நாட்டப்படுகிறது. மக்களின் வாழ்க்கை தரம் உயரும் போது இந்த நகரமும் வளர்ச்சி காணும்.

கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமான வீடுகளை மத்திய அரசு கட்டிக் கொடுத் திருக்கிறது. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இத்தகைய வீடுகளின் உரிமையாளர்களாக கோடிக்கணக்கான பெண்கள் மாறி இருக்கிறார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண் லட்சாதிபதிகள் உருவாகி இருக்கிறார்கள். ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு அதிக முன்னுரிமை கொடுத்துவருகிறது. அதன் ஒரு அங்கமாகவே, தற்போது புனே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், ரயில்வே மேம்பாட்டுக்காக 12 மடங்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது” என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...