பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் ‘தென்இந்தியாவின் எதிர்கால அரசியல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகள் கேட்டகேள்விகளுக்கு பதில் அளித்தார்.
முன்னதாக முரளிதரராவ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:-
இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில்கொண்டே மத்திய அரசு செயல்படுகிறது. அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மீனவர்கள் நலனை பேணிக் காக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளின் மீனவர்கள் பிரச்சினையை சரிசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இலங்கையில் வாழும் தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
பா.ஜ.க. தேசிய செயல் தலைவராக பொறுப்பு ஏற்றபின்னர் முதல் முறையாக ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். கட்சியின் முக்கிய தலைவர்களுடன் உள்ளாட்சி தேர்தல், தமிழக பாஜக.வுக்கு மாநில தலைவரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் ஆலோசனைசெய்ய உள்ளார். இதேபோல வருங்காலத்தில் பா.ஜ.க.வின் பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்குகிறார்.
தமிழகம் முக்கியமாநிலம் மட்டும் அல்ல, சவாலான மாநிலமும்கூட. தற்போது வரையிலும் அதிமுக. உடன் கூட்டணி தொடருகிறது. அதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது. வெளிப்படையாக இப்போது எதுவும்சொல்ல முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும். தமிழக பாஜக.வுக்கு 2 வார காலத்துக்குள் தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுப்போம்.
தி.மு.க. போல குடும்ப உறுப்பினர்களை தலைவராக தேர்ந்தெடுக்க மாட்டோம். தி.மு.க.வை பொறுத்தமட்டில் அவர்களே நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள். ஆனால் நாங்கள் கட்சிதொண்டர்கள் இடையே தேர்தல் நடத்திதான் தலைவரை தேர்ந்தெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |