ஜெயலிதா எதிர்பார்த்தது நல்ல நட்பைதான்

டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பபட்ட ஒரு ரகசிய பைல், முதல்வரின் கண்ணில்_படாமல் மறைக்கப்பட்டுள்ளது . அந்த பைலை, வெள்ளிக் கிழமை எதிர்பாராமல் முதல்வர் ஜெயலலிதா எடுத்து_படித்துள்ளார். அதற்க்கு பிறகு தான் சசிகலாவின் ஆதரவர்கள் ஒவ்வொருவராக கழற்றி விடப்பட்டுள்ளனர்.

அதிகார மையத்தினரால் நடத்தபடும் வசூல்வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து ரகசிய, பைல் ஒன்று முதல்வருக்கு அனுப்பபட்டது. அந்த கோப்பை முதல்வரின் கவனத்துக்கு போகாமல் சிலர் மறைத்துள்ளனர் .

அந்த ரகசிய பைல், கடந்த ஒரு மாத காலமாகவே கார்டனில் கிடப்பில்போட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பைலை ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதில் சசிகலா குரூப் ஒவ்வொருவரும் மேற்கொண்ட வசூல் வேட்டை பற்றி விலாவாரியாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்தே ஜெயலலிதா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது.

வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம் ..ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கு 1989 இல் சேவல் சின்னத்தில் அவர் பெற்ற வெற்றியிலிருந்தே இந்தியா அறிந்திருந்தது. எனவேதான் ராஜீவ் காந்தி ஜானகியுடனான கூட்டணியை தவிர்த்து , ஜெயலலிதாவுடன் அரசியல் கூட்டணியை கண்டார்…

சசிகலாவின் ஆரம்பகால உதவியை நன்றி மறவாமல் தன அருகில் வைத்துகொண்டார் எந்த ஒரு சாதாரண_பெண்ணும் தனியாக வாழ்ந்து விட முடியாது மனரீதியிலான ஒரு தோழிyum தேவை ..

இந்நிலையில் 1991 தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றார். ஆனால் தோழி குடும்பமோ அரசியல் மற்றும் நிர்வாகத்தில் புகுந்து விளையாடியது. இதன் பலனாக சாதானமாக இருந்த மன்னார்குடி குடும்பம் மிகப்பெரும் பணக்கார குடும்பமாக மாறியது

இதனை பிரசாரமாக்கியே கருணாநிதி 1996_இல் மீண்டும் ஆட்சியை பிடித்தார். ஓரளவுக்கு சுமாரான ஆட்சியையும் கொடுக்க முடிந்தது அப்போது ஜெயலலிதாவின் மேல் ஏகப்பட்ட ஊழல் புகார்களை பதிவுசெய்த திமுக ஆட்சி , சசிகலாவின் குடும்ப ஊழலக்கும் ஜெயலிதாவையே பலி கடா ஆக்கியது

அந்த சமயத்தில் கோபம் கொண்ட ஜெயலலிதா சசி குடும்பத்தை துரத்தினார். பிறகு அவர்களது ஆரம்ப கால உதவியை மனதில் கொண்டு மன்னித்து மீண்டும் சேர்த்து கொண்டு இருக்கலாம் யாருக்காக ஜெயலலிதா ஊழல் செய்ய வேண்டும்?

2001 இல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்… இப்போது சசி குடும்பத்தின் கொட்டத்தை அடக்கி வைத்தார் நல்லாட்சி 2001 முதல் 2006 வரை நடந்தது. லாட்டரியை ஒடுக்கியது, மழை நீர் சேகரிப்பு திட்டம் , புதிய வீராணம் திட்டம் , திமுகவினருக்கு சென்று கொண்டிருந்த ஒயின்ஷாப் வருமானத்தை டாஸ்மாக்கின் மூலம் அரசுக்கு திருப்பிவிட்டு அரசின் வருமானத்தை உயர்த்தியது., பள்ளி மாணவருக்கு சைக்கிள்_கொடுத்தது, இப்படி நல்ல ஆட்சியை தந்தாலும் அரசு ஊழியர்கள் மீதான கண்மூடி தனமான நடவடிக்கையின் காரணமாக நூலிலையில் ஆட்சியை தவறவிட்டார், இறுப்பினு தொலை நோக்கு பார்வை உடைய இந்திய அரசியல் தலைவர்கள் ஒரு சிலரில் ஜெயலலிதாவும் ஒருவர். எனவேதான் ஜெயலலிதா சுயநலன் இல்லாமல் மாணவர்களின் படிப்பிற்காக சைக்கிளை தந்தார், ஆனால் கருணாநிதியோ சுயலத்துடன் தொலைக்காட்சியை தந்தார்.

தரித்திர தொலைநோக்கு இல்லாத ஊதாரித்தனமான இலவசங்களை நம்பி 2006இல் மக்கள் கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினர். அன்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தால் இன்று தமிழகத்திடம் கடன்சுமை என்பது இல்லாமல் உபரி நிதியே இருந்திருக்கும்,

ஏனென்றால் 2001 -2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக இருந்ததால் தான் , கருணாநிதி தமிழக வரலாற்றில் முதல் முறையாக மெஜாரிட்டி இல்லாமல் காங்/பாமக தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதை போன்று 61 இடங்களை எந்த எதிர்கட்சியும் இதுவரை தமிழகத்தில் பெற்றதில்லை. 2006 இல் ADMK பெற்றது…அதுவே 2001 -2006 வரையிலான ஊழலற்ற ஆட்சியின் அத்தாட்சி….2006 இல் வந்த கருணாநிதியால் ஏதாவாது ஒரு ஊழலில் ஜெயலலிதா மீது கைநீட்ட முடிந்ததா?

2006 இல் வந்த கருணாநிதி குடும்பம், மத்தியிலும் மாநிலத்திலும் அடித்த கொள்ளையின் காரணமாக எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தைகூட 2011 இல் பறிகொடுத்தது..ஒரு வேளை சசி கலாவின் கூட்டம் ஜெயலலிதாவின் வயது_முதிர்வை காரணம் காட்டி , அவர் கவனத்துக்கு பல விஷயங்களை கொண்டுசெல்லாமல் தானே முடிவெடுத்தனரோ என்னவோ? இந்தமுறையும் ஜெயலலிதா நம் குடும்பத்தை ஊழல்_பண்ண விடமாட்டார் என்பதை மோப்பம்பிடித்த அந்த குடும்பம் , 1991 போல தானே கையில் அதிகாரதை எடுத்திருக்கும்…ஆனால் அந்த கூட்டத்தின் சதியை சரியான _சமயத்தில் உணர்ந்து இன்று நடவடிக்கை_ எடுத்துள்ளார். சசிகலாவிடமிருந்து ஜெயலலிதா எதிர்பார்த்தது நல்ல நட்பைதான். நல்ல தோழியைதான் ஆனால் சசிகலாவுக்கு தேவையோ நட்பல்ல அதிகாரம் புகழ் பணம்.

தமிழ் தாமரை VM . வெங்கடேஷ்

ஜெயலலிதா, admk office ஜெயலலிதா வழக்கு, ஜெயலலிதாவின், admk website

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...