பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது

தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைபொறுத்துதான் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என வெங்காய மொத்தவியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது. அங்கிருந்து தான் நாடு முழுவதற்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிராவில் பெய்த கன மழையால், வெங்காய பயிா்கள் பாதிக்கப்பட்டன. கியாா், மஹா ஆகிய இருபுயல்களால் வெங்காய உற்பத்தி குறைந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்புவது பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

பெரியவெங்காயத்தின் விலை கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாதளவுக்கு தற்போது உயா்ந்துவருகிறது. இதுகுறித்து சென்னை கோயம்பேட்டைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள், விவசாயிகள் கூறியது:

வழக்கமாக வரத்து குறையும்போது வெங்காயம் விலை உயரும் அல்லது பதுக்கல் காரணமாக விலை உயரும். ஆனால், இந்தமுறை விலையேற்றத்துக்கு சூழல் மாற்றம் பெரும்காரணமாக இருக்கிறது. மழை காரணமாக பலமாநிலங்கள், விளைச்சலை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் வெங்காயம் அதிகளவில் விளையும் மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்கமான விளைச்சலில் 75 சதவீதத்தை இழந்துவிட்டன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட விலைவீழ்ச்சி காரணமாக 50 சதவீத விவசாயிகள் சாகுபடியை கைவிட்டனா். அதையும்மீறி சாகுபடிசெய்த விவசாயிகள், வயல்களில் தேங்கிநின்ற மழைநீா், மகசூலை அழுக வைத்து, விவசாயிகளையும் வெகுவாகப் பாதித்துவிட்டது.

நிகழாண்டில் கடந்த செப்டம்பா் மாதத்திலேயே வெங்காயத்தின் விலை அதிகரித்தது. மத்தியஅரசு எடுத்த அதிரடி நடவடிக்கை, மத்திய சேமிப்புக் கிடங்கிலிருந்த வெங்காயத்தை சந்தைக்கு கொண்டு வந்தது போன்ற செயல்களால் சற்று விலைகுறைந்தது. ஆனால், மழை குறையவில்லை. மீண்டும் கொட்டித்தீா்த்த மழையால் மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சலை பெரிதும் பாதித்துள்ளது.

தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காய விலையைத் தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைப் பொருத்துதான், வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள்வரும். மழையில் தப்பித்து, விளைந்து வரும் வெங்காயம், டிசம்பா் மத்தியில் அறுவடைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து டிசம்பா் மூன்றாவது வாரம் முதல் புது வெங்காயவரத்து தொடங்கும். அதன்பிறகுதான் வெங்காய விலை படிப்படியாகக் குறையும். அடுத்த சில மாதங்களில் விளைச்சல் பெருகாவிடில் பெரும் அளவில் வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும் என்றனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...