இந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலம்

அண்டை நாடுகளில், துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் இந்திய வம்சாவளி யினருக்கு, மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி தருவோம்,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர், டில்லியில், ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் நிகழ்ச்சியில் பேசியதாவது: தாய்நாடு மீது பக்திகொண்ட நுாற்றுக்கணக்கான இந்தியர்கள், அண்டை நாடுகளில் துன்பத்தில் உழன்று வருகின்றனர். அவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கி வளமான எதிர்காலம் அமைத்து தர உள்ளோம். இதற்காக, குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை பார்லி., யில் நிறைவேற்றும் பணி துவங்கியுள்ளது.ராமஜென்ம பூமி வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன், ‘நாட்டின் அமைதி சீர்குலையும்’ என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால், அது தவறு என்பதை மக்கள் நிருபித்துவிட்டனர். ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல் சாசனசட்டம், 370வது பிரிவை நீக்கியது, அரசியல் ரீதியாக கடினமான முடிவுதான். ஆனால், அது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களிடம், முன்னேற்றத்திற்கான புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. அரசு, நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கு, முக்கிய பிரச்னைகளில் கவனம்செலுத்தும்.

நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளோம். ஒருகாலத்தில், வங்கிகள் தேசியமய மாக்கப்பட்ட போது, பத்திரிகைகள் பாராட்டி, கட்டுரைகளை வெளியிட்டன. அந்தவங்கிகளை தற்போது துணிவுடன் ஒன்றிணைத்து வருகிறோம். வங்கித்துறை பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.நாங்கள், முந்தைய அரசு போல, வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில்லை.

இலக்கு நிர்ணயித்து, செயல்பாட்டில் கவனம்செலுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். விரைவில் தாக்கல்அண்டை நாடுகளான, பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோருக்கு, இந்தியகுடியுரிமை அளிக்கப்பட உள்ளது. இதற்கான, குடியுரிமை சட்டதிருத்த மசோதா, நடப்பு, பார்லி., கூட்டத் தொடரில் தாக்கல்செய்யப்பட உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...