தாவரங்களின் எதிரி பார்த்தீனியம்

மண்ணில் வளரும் மரம், செடி, கொடி, புல், பூண்டுகள் மலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து மனமகிழ்ச்சி கொள்கிறோம். அதே வேளையில் மனித குலத்தை அச்சுறுத்தும் தாவரங்கள் இருப்பதை அறியும் போது இதயம் பதறுகிறது. தற்போது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஒரு பயங்கர தாவரம் பரவி வருவதை நினைக்கும்போது

மனம் விசனப்படுகிறது. அந்த தாவரத்தை அழிப்பதற்காக அரசு இயந்திரங்கள் இப்போது முழுமையாக முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த தாவரம் தான் தாவரத்தின் தீவிரவாதியாகக் கருதப்படும் பார்த்தீனியம். மனிதனுக்கும் கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பயங்கரவாத செடியான பார்த்தீனியத்தைப் பற்றி இங்கு நாம் பார்ப்போம்.

பருவகால செடி

பார்த்தீனியம் என்ற பெயர் “Parthenice” என்ற லத்தீன் வார்த்தையி ருந்து தோன்றியது இச்செடியின் தாவரவியல் பெயர் ““Parthenium Hysterophorous”” என்பதாகும். அமெரிக்க நாட்டை தாயகமாகக் கொண்ட இச்செடி ஒரு பருவகால (Annuals) பயிர் வகையைச் சார்ந்தது. இதற்கு மண்ணை ஆழமாகத் துளைத்துச் செல்லும் ஆணிவேரும், நேராக நிமிர்ந்து வளரும் உறுதியான தண்டுகளும் உண்டு. பல கிளைகள் கொண்ட பார்த்தீனியம் செடியின் இலைகள் மங்கலான பச்சை நிறத்தையும், மென்மையான உரோமங்களையும் கொண்டிருக்கும். இதன் பூக்கள் செடியின் மேல் பகுதியில் வெண்மை நிறத்தில் காட்சி தரும். ஒரு செடி சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு இலட்சம் விதைகளை உற்பத்தி செய்யும். இந்த விதைகள் கறுப்பு நிறத்தில் வெள்ளை செதில்களுடன் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய அளவில் காணப்படும்.

கோதுமை தோழன்

அமெரிக்க நாட்டில் தோன்றிய இச்செடியின் கொடிய விளைவுகள் ஆப்பிரிக்கா, ஆஸ்டிரே யா, ஆசியா கண்டங்களில் தான் அதிகமாக உணரப்பட்டது. நம் நாட்டில் 1956-ம் ஆண்டு பூனாவில் பார்த்தீனியத்தை பார்க்க முடிந்தது. இதன் விதைகள் அமெரிக்க நாட்டி ருந்து நம் நாட்டுக்கு வரப்பெற்ற கோதுமையுடன் உறவு கொண்டு இங்கு வந்து எல்லா பகுதிகளிலும் தனது பாதச் சுவடுகளைப் பதித்துவிட்டது. கா இடங்கள், தரிசு நிலங்கள், சாலையோரங்கள், கரையோரங்கள் என எல்லா இடங்களிலும் புகுந்து சுமார் 35 மில் யன் எக்டர் பரப்பில் இப்போது பரவியுள்ளது. அதோடு சாகுபடி நிலங்களையும் விட்டு வைக்காமல் அதிவேகமாக ஆக்கிரமித்து வருவது அனை வரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புல் வெளிகளுக்குள் ஊடுருவிய இச் செடியான து கால்நடை தீவினங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.

நச்சுக் களை களைச் செடியாக எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும் பார்த்தீனியத்தில் உள்ள  நச்சுப்பொருள் நமது சுவாச உறுப்புகளுக்குள் நுழைந்து உடல் உபாதைகளை உண்டாக்குகிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் இச்செடி கூடுதலாக வளர்ந்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், தாவரங் களுக்கும் நச்சுத் தன்மையைத் தருவதோடு அலர்ஜியை ஏற்படுத்தி விடுகிறது. விளை நிலங்களில் வளரும் இச்செடியினால் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பார்த்தீனியம் கலந்த பசுந்தீவனங்களைச் சாப்பிடும் கால்நடைகளின் பால் கசப்புத்தன்மை பெறுகிறது. ஆண்டு முழுவதும் முளைத்து வளரும் தன்மை கொண்ட இச்செடியானது இயற்கையின் எல்லா சூழ்நிலைகளையும் எளிதாகச் சமாளித்து வளரும் ஆற்றல் பெற்றது. செடியின் வாழ்க்கைச் சக்கரம் முழுவதும் பூத்துக் கொண்டிருக்கும் தன்மையினால் இதன் விதை உற்பத்தி அதிகரித்து எளிதாக எங்கும் பரவி விடுகிறது. இவை கரியமில வாயுவை கூடுதலாக வெளிவிடுவதால் சுற்றுச் சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

ஆரோக்கியப் பிரச்சினை

ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த செடியின் மலரிலுள்ள மகரந்தங்கள் குழந்தைகளுக்கும், முதியவர் களுக்கும் ஆஸ்த்துமா நோயை தோற்றுவிக்கிறது. மேலும் அநேகருக்கு அலர்ஜியாக விளங்கும் இச்செடி அரிப்பையும், படை நோயையும் ஏற்படுத்தி தொல்லை தருகிறது. மனித குலத்துக்கும் விலங்கினத்துக்கும் தோல் வியாதிகளை உருவாக்குவதில் இது முன்னிலை வகிக்கிறது. கால்நடைகளின் எடையை இற க்குவதோடு பா ன் அளவையும் குறைத்து விடுகிறது. கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இவ்விதம் ஆரோக்கிய பிரச்சினை களுக்கு ஆதாரமாகத் திகழும் பார்த்தீனியத்தை அழிப்பதற்கு பல்வேறு முறைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பார்த்தீனியம் செடியுடன் ஒவ்வாமை உடையவர்கள் உரிய பாதுகாப்பு ஆடைகளை அணிந்த பின்னர்தான் இச்செடிகளை அழிக்கும் வேலையில் இறங்க வேண்டும். பார்த்தீனியத்தை வேருடன் பிடுங்கி மண்ணுக்குள் புதைப்பதால் அவை மக்குரமாகி விடுகிறது.

செடி ஒழிப்பு முறை இச்செடியை வெட்டி விடுவதைவிட பூக்கும்பருவத்தை அடைவதற்கு முன்னால் வேருடன் பிடுங்கி அழிப்பது சாலச்சிற ந்தது. பார்த்தீனியத்தை இளம் வளர்ச்சிப் பருவத்தில் அழிப்பதற்கு பாதுகாப்பான களைக் கொல்- களைப் பயன் படுத்தலாம். உயிரியல் முறையில் பார்த்தினியம் செடியின் இலைகளை விரும்பித்தின்னும் பூச்சிகளை விட்டும் கட்டுப்படுத்தலாம். பார்த்தீனியம் மிகுந்துள்ள இடங்களில் கேசியா (Cassia) இனத்தைச் சார்ந்த எதிரிச் செடிகளை வளரவிட்டும் இவை பரவாமல் தடுக்கலாம். நன்கு நிலத்தை உழுது களைகளின்றி பண்படுத்தும் போது பார்த்தீனியம் வளருவதற்கு வாய்ப்பில்லை. அதிகமாக பார்த்தீனியம் காணப்படும் இடங்களில் அவைகளைப் பிடுங்கி உரக் குழியில்போட்டு கம்போஸ்ட் உரமாக மாற்றி விடுவது மிகவும் சிறப்பு. இவை தவிர பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்த எல்லோராலும் பின்பற்றப்படும் எளிய சிக்கன மான முறை என்னவென்றால் ஒரு கிலோ உப்பையும், ஒரு லிட்டர் சோப்பு ஆயிலையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதாகும். இவ்வாறு செய்வதால் 2-3 தினங்களில் செடிகள் வாடி வதங்கி கரிந்து அழிந்து போகும். பார்த்தீனியத்தை இன்னும் பரவாமல் தடுப்பதற்கு தயாராவோம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...