கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அபாரவெற்றி

கர்நாடக சட்ட சபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம்தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக. சார்பில் 13 தொகுதிகளில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும், ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், சிவாஜிநகரில் எம்.சரவணா ஆகியோரும் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டனர். இதில் முக்கியமாக ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 2 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் கடைசிநேரத்தில் மனுவை வாபஸ் பெற்றனர். ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவுக்கு அக்கட்சி ஆதரவுவழங்கியது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 165 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11 இடங்களில் பலத்தபாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்தது.
இந்நிலையில்,  கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றி பாஜக. அபாரவெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒருதொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால்தான் பா.ஜ.க. ஆட்சியையும், முதல்-மந்திரி பதவியையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பியது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எடியூரப்பா அரசு அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...