குடியுரிமை திருத்தச்சட்டம் எந்தவொரு இந்தியக் குடிமகனின் உரிமையையும் பறிக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரானபோராட்டத்தை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். இது குறித்து மேலும் பேசியவர்,
“குடியுரிமை திருத்தச்சட்டம் எந்தவொரு இந்தியக் குடிமகனின் உரிமையையும் பறிக்காது. யாருக்கும் தீங்கிழைக்காது. அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே முஸ்லிம்களை தூண்டி விடுகின்றன. நீண்டகாலமாக பரிதாப நிலையில் இருப்பவர்களுக்குத்தான் இந்தச்சட்டம். மூன்று அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் மக்கள் இந்தியாவுக்கு வரவேண்டும். இது அவர்களுக்கானச் சட்டம். இதில் எந்தஇடத்தில் இந்திய முஸ்லிம்களின் உரிமை மீறல் அல்லது வேறு ஏதேனும் ஒரு இந்தியரின் உரிமை மீறல் இருக்கிறது?
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சவால்விடுக்கிறேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால் அனைத்து பாகிஸ்தானிய குடிமக்களுக்கும் இந்தியக் குடியுரிமைவழங்கி, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கில் சட்டப்பிரிவு 370 திரும்ப கொண்டுவரப்படும் என வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமது புனிதநூலாகும். எனக்கு இளைஞர்களிடத்தில் ஒருவேண்டுகோள் உள்ளது. கல்லூரிகளில் எங்களது கொள்கைகளை விவாதியுங்கள், ஜனநாயக முறையில் போராடுங்கள். நாங்கள் உங்கள் கருத்துக்கு செவிசாய்ப்போம்” என்றார்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |