திமுகவை கண்டித்து வரும் 20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தசட்டம் தொடர்பாக திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தசட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் 23ம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் கண்டனபேரணி நடத்த முடிவு செய்யப் பட்டது.
இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர் களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக சாதி, மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி சூழ்ச்சி செய்து ஆட்சியை பிடிக்க முயற்சிசெய்வதாக குற்றம்சாட்டினார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இலங்கை தமிழர்களின் விருப்பம் சார்ந்து கருத்துகேட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |