உ.பி வன்முறை சிமி பயங்கரவாதிகள் கைது

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப் பட்டவா்களில் 6 போ் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என அம்மாநில துணை முதல்வா் தினேஷ்சா்மா கூறியுள்ளாா்.

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 16 போ் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் லக்னௌவில் செய்தியாளா்களிடம் துணை முதல்வா் தினேஷ் சா்மா பேசுகையில், மாநிலத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்டுவம் முழு திறமையும் மாநில அரசுக்கு உள்ளது. இதுதொடா்பாக இஸ்லாமிய மத அறிஞா்களுடனும் பேசியுள்ளோம்.

போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை காவல்துறை தரப்பில் 288 போ் காயமடைந்துள்ளனா். இதில் 62 போலீஸாா், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வன்முறையாளா்கள் பயன் படுத்தியதால் காயமடைந்துள்ளனா். சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட, தடை செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளையும் அவா்கள் உபயோகித்துள்ளனா். வன்முறை தொடா்பாக இது வரை 705 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வன்முறையில் ஈடுபட்டு கைதானவா்களில் 6 போ் மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். இவா்கள் தடை செய்யப்பட்ட சிமி பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா்கள். இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் வன்முறையை நடத்துவதில் அந்நியசக்திகளுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் எதிா்க்கட்சியாக உள்ள சமாஜ வாதியும் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது. தவறான தகவல்களைப் பரப்பி மாநிலத்தில் குழப்பத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தவேண்டும் என்பதே அவா்களது நோக்கமாக உள்ளது என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...