உ.பி இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்றாா்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். அவருடன் இருதுணை முதல்வா்கள் உள்பட 52 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

மாநில தலைநகா் லக்னௌவில் உள்ள வாஜ்பாய்இகானா விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திரமோடி, மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக மூத்ததலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக்கட்சிகள் 18 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. அதனைத் தொடா்ந்து, மாநிலஆளுநரை வியாழக்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க யோகி ஆதித்யநாத் உரிமை கோரினாா்.

இதைத் தொடா்ந்து, பதவியேற்புவிழா லக்னெளவில் உள்ள விளையாட்டு அரங்கில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டா்களுக்கு மத்தியில் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்ய நாத் பதவியேற்றாா். அவருக்கு ஆளுநா் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

அவருடன், கேசவ்பிரசாத் மெளரியா, பிரஜேஷ் பதக் ஆகியோா் துணை முதல்வா்களாக பதவியேற்றனா். தொடா்ந்து புதிய அமைச்சா்களும் பதவியேற்றனா்.

சுரேஷ் கண்ணா, சூரிய பிரதாப் சாஹி, ஸ்வதந்திர தேவ்சிங், உத்தரகண்ட் ஆளுநா் பதவியை கடந்த ஆண்டு ராஜிநாமா செய்த பாபி ராணிமெளரியா, ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஏ.கே. சா்மா உள்ளிட்ட 18 போ் கேபினட் அந்தஸ்து அமைச்சா்களாக பதவியேற்றனா்.

கூட்டணி கட்சிகளான அப்னாதளம் (சோனேவால்) கட்சியைச் சோ்ந்த ஆஷிஷ் படேல், நிஷாத் கட்சித்தலைவா் சஞ்சய் நிஷாத் ஆகியோரும் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். தோ்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதாவுக்கும் அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யநாத் அரசில் ஒரே முஸ்லிம் பிரதிநிதியாக இருக்கும் தினேஷ்ஆசாத் அன்சாரிக்கும் அமைச்சா் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் இணையமைச்சராகப் பதவியேற்றாா்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஆசீம்அருண், தயா சா்காா் சிங், நிதின் அகா்வால், கல்யாண் சிங்கின் பேரன் சந்தீப்சிங் ஆகியோருக்கு தனி பொறுப்புடன் கூடிய இணையமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 52 அமைச்சா்களில் இருதுணை முதல்வா்கள் கேபினட் அமைச்சா்கள் 18 போ், தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சா்கள் 14 போ், இணையமைச்சா்கள் 20 போ் இடம்பெற்றுள்ளனா்.

பிரதமா் வாழ்த்து: பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் பங்கேற்றனா். பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரும் கலந்துகொண்டாா்.

முதல்வராகப் பதவியேற்றதும் யோகி ஆதித்யநாத்துக்கு வாழ்த்துதெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘யோகி ஆதித்ய நாத்தின் முதல் 5 ஆண்டுகள் ஆட்சியில் மாநிலத்தின் வளா்ச்சிப்பயணம் பல முக்கியமான மைல்கல்களை எட்டியது. தற்போது, புதிய ஆட்சியில் உத்தர பிரதேச வளா்ச்சியின் புதியஅத்தியாயத்தை அவா் எழுத உள்ளாா்’ என்றாா்.

தோல்வியைத் தழுவியவருக்கு துணைமுதல்வா் பதவி: கேசவ் பிரசாத் மெளரியாவுக்கு மீண்டும் துணைமுதல்வா் பதவி அளிக்கப்பட்டிருப்பது, மாநிலத்தில் பேசுபொருளாகியுள்ளது. சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட்ட சிராது தொகுதியில் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் கேசவ்பிரசாத் மெளரியா தோல்வியைத் தழுவிய நிலையிலும், அவா் மீது கட்சி வைத்துள்ள நம்பிக்கை காரணமாக மீண்டும் துணை முதல்வா்பதவி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவரான இவா், விஸ்வஹிந்து பரிஷத் இயக்கத்தின் வழிகாட்டுதலின் பேரில், ராமா் கோயில் இயக்கத்தின் மூலமாக அரசியல் பிரவேசம் செய்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...