அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு ஜார்கண்ட் மக்கள் அனைவரும் வீட்டிற்கு தலா ரூ.11 ம், செங்கலும் வழங்கும்படி உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜார்கண்ட்டில் டிச.,20 ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், அயோத்தியில் மிக விரைவில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கப்படும். அதற்காக ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் செங்கற்களை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். சமூகத்தின் பங்களிப்பிலேயே ராமராஜ்யம் இயங்குகிறது. ராம ராஜ்யசத்தில் எந்தபாகுபாடும் இன்றி அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும். சமூகம், இளைஞர்கள், தலித், பெண்கள் உள்ளிட்ட அனைவரின் வளர்ச்சியும் அதில் அடங்கும் என்றார்.
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் நவ.,09ம் தேதி அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் டிச.,12 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணியை பா.ஜ.,வும், உ.பி., அரசும் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |