5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட்சம்கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து துறைகளுக்கு 17 லட்சம் கோடி ரூபாய் செலவிடப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 22 பசுமை வழி விரைவு சாலைகள் உட்பட, உலகத்தரம் வாய்ந்த சாலைகளை உருவாக்க, நெடுஞ்சாலை துறைக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 15 லட்சம்கோடி ரூபாய் முதலீடு செலுத்தப்படும் எனவும் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஃபாஸ்டேக் முறைக்குப் பிறகு, சுங்கச்சாவடி வருவாய் நாள் ஒன்றுக்கு 25 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாகவும், ஆண்டுவருவாய் 8 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மோட்டார் வாகனதிருத்த சட்டம் நிறைவேற்றப் பட்டது மிக முக்கியமான மைல்கல் என்றும், விபத்துகள் குறைவதன் மூலம் இந்தசட்டத்தின் தாக்கத்தை உணரமுடியும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |