உத்திர பிரதேச முதல்வர் உ.பியின் வீரத் துறவி யோகி ஆதித்யநாத் அவர்களின் அதிரடிக்கு பணிந்தனர் கலவரக்காரர்கள். CAA எதிர்ப்பு ஆர்பாட்ட வன்முறையால் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்த நிலையில் வன்முறையாளர்கள் யார்? யார்? என்பதும், எந்த பகுதியில் யாரால் வன்முறை நடத்தப் பட்டது? யாரால் தூண்டப்பட்டது ? என்பதையெல்லாம் கண்டறிந்து சம்மந்த பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வசூல்செய்யும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுபப்பட்டு வருகிறது.
இதனிடையே வன்முறைகளமான மீரட்டின் புலந்தர்ஷா பகுதியைச் சேர்ந்த மக்கள் (வன்முறையில் ஈடுபட்டோர்)தாங்களாகவே முன்வந்து 6 லட்சம் இழப்பீடை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் கொடுத்துள்ளனர். இதுகுறித்த கூட்டம் சென்றவாரத்தில் நடைப்பெற்றதை அடுத்து நேற்று ஊர்மக்கள் உள்ளூர் இஸ்லாமிய அரசியல் தலைவர் ஷைக்கிலுல்லா தலைமையில் வந்திருந்து பொதுச் சொத்து சேதப்படுத்தியதற்கான இழப்பீடு தொகையை கொடுத்தனர்.
மேலும் அன்றைய வன்முறையின் போது காவல்துறை வேன் ஒன்று போராட்டக் காரர்களால் கொளுத்தப் பட்டது. அதே போன்றதொரு வேன் புதியதாக வாங்கித்தர ஒத்துக்கொண்ட அப்பகுதி மக்கள், அந்த மாடல் கிடைக்காத காரணத்தால் அதற்குரிய பணத்தையும் செலுத்தியதாக தெரிகிறது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் இனி இதுபோன்று வன்முறைகளில் எக்காலத்திலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி அளித்ததாகவும் கூறப்படுகிறது. தாங்களாகவே முன்வந்து சேதத்திற்கான இழப்பீடு தொகையை கொடுத்துச்சென்ற அம்மக்களால் துறைரீதியான காலதாமதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக கூறிய மாவட்ட நிர்வாகம், மற்றப்பகுதிகளிலும் இதே நடைமுறையில் மக்கள் நடந்துகொண்டால் அவர்களுக்கும் சிக்கல் இல்லை, நிர்வாக தாமதமும் நடக்காது என்று தெரிவிக்கின்றனர்.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |