குடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது

”குடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் ., ஆட்சியில் நடந்த வரலாற்று பிழைகளை பிரதமர் மோடி சரி செய்து வருகிறார்,” என, மத்தியபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தசட்டத்தை ஆதரித்து, மதுரையில், பா.ஜ.க, சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:குடியுரிமை திருத்தசட்டத்தை கொண்டு வந்ததே, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியில் தான். அதை, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்து பவர்களுக்கு ஆதரவாக பேசி, தேசபாதுகாப்பிற்கு எதிராக கல்லெறிந்த திமுக.,  காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கக்கூடாது என்ற அரசாணை வெளியானபோது ஏன் எதிர்க்கவில்லை.

நாட்டை கொள்ளையடிக்கும் பணியை, தி.மு.க.,வுக்கு மன்மோகன்சிங் ஆட்சியில் வாய்ப்பு கொடுத்ததால் அக்கட்சி பேசவில்லை. ஆனால் இப்போது, தி.மு.க., கொதிக்கிறது.தி.மு.க.,வுக்கு எப்போதும், ஹிந்துக்கள் மீது நம்பிக்கைஇல்லை. காங்கிரசுக்கு சீக்கியர்கள் மீது நம்பிக்கை இல்லை.

தற்போது, கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதையும் ஏன் இருகட்சிகளும் எதிர்க்கவேண்டும்.டில்லி பல்கலையில் மாணவர் போராட்டத்தை துாண்டிவிட்டது, காங்கிரஸ்தான்.ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு சட்டத்தை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மோடி அரசு செய்துள்ளது.அந்தவரிசையில், குடியுரிமை திருத்த சட்டத்தாலும், நாடுமுழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில், காங்., ஆட்சியில் நடந்த பல்வேறு வரலாற்று பிழைகளை, தற்போது பிரதமர் மோடி சரிசெய்கிறார்; இது தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...