பா.,ஜனதா கட்சியின் தேசியதலைவராக தற்போதைய செயல் தலைவர் ஜே.பி. நட்டா வரும் 20-ந்தேதி தேர்வுசெய்யப்பட உள்ளார்.
பாஜகவில் ஒருவருக்கு ஒருபதவி என்கிற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவரான அமித் ஷா, உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து பாஜகவில் செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வரும் 20 அல்லது 21-ந்தேதி பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா அறிவிக்கப்படுவார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
பாஜகவின் கட்சி விதிகளின் படி 50% மாநில தலைவர்களைவாது நியமித்த நிலையில் தான் தேசிய தலைவர் தேர்வுசெய்யப்பட வேண்டும். இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் மாநில பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |