5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றாலும் இயலாதது அல்ல

நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் பொருளாதாரம் மிக வீழ்ச்சிகண்டு வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. ஒருபுறம் இந்த வீழ்ச்சியினால் அடுத்து வரும் காலாண்டுகளிலும் வீழ்ச்சி காணும், இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் $5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைவது கஷ்டம்தான் என்று பல நிபுணர்கள் கூறிவந்தனர்.

இந்த நிலையில் மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மத்திய அரசின் $5 டிரில்லியன் இலக்கை அடைவது கஷ்டம்தான். ஆனால் சாத்தியமற்றது அல்ல என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம் இந்தூர் நிர்வாகத்தின் 29வது சர்வதேசமேலாண்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நிதின் கட்கரி, அங்கு பேசுகையில், 2024ம் ஆண்டில் இந்தியாவைப் 5 டிரில்லியன் டாலர் இலக்குகொண்ட பொருளாதாரத்தை அடைவது கஷ்டம்தான். ஆனால் சாத்தியமற்றதல்ல.

எந்தவொரு வலுவான இலக்கினையும் அடைய வலுவான அரசியல்விருப்பம் மிக முக்கியம். அதனை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி $5 டிரில்லியன் இலக்கை அடைய இலக்கு வைத்துள்ளார். இந்தஇலக்கை அடைவது கடினம் தான். ஆனால் சாத்தியமற்றதல்ல

நம் நாட்டில் ஏராள மான வளங்களும் உற்பத்தி திறனும் உள்ளன. இருந்தாலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை இறக்குமதிசெய்வதிலும், நிலக்கரி, காப்பர், காகிதங்கள் உள்ளிட்ட பலபொருட்களை இறக்குமதிசெய்ய கோடிகணக்கில் செலவு செய்கிறோம்.

நாம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய விரும்பினால் அதிகளவில் இறக்குமதி செய்வதை தவிர்த்து, அதற்குபதிலாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

நாங்கள் உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். ஆனால் தற்போது வணிகத்தில் ஒருசுழற்சி உள்ளது. மேலும் விவசாயத்திலும் சவாலான நிலை உள்ளது. மேலும் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவிவரும் மந்த நிலை காரணமாகவும், தேவைமந்தம் காரணமாகவும் மந்த நிலை நிலவி வருகிறது.

எனினும் நாட்டில் நிலவிவரும் மந்தநிலை ஒருபுறம் இருந்தாலும், நாட்டில் நிலவி வரும் சிரமங்களையும், சில சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றக்கூடிய இளைய தலைமுறையினரின் தலைவர்களில் இந்தியாவின் எதிர் காலத்தை நான் காண்கிறேன்.

நாட்டில் மூலதனம் மற்றும் வளங்கள், தொழில் நுட்பத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் நிச்சயமாக பல்வேறு துறைகளில் சரியான பார்வை மற்றும் தலைமை இல்லை  சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதன் மூலம் ஏற்றுமதிகள் ஆதரிக்கப்படும்.

இந்த முயற்சியானது ஐந்துகோடி புதிய வேலைகளை உருவாக்க உதவும், இது 5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய ஒவ்வொரு துறையும், பங்கு அளிக்கசெய்ய முடியும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...