தந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்கிறார் ஸ்டாலின், எப்படி பேசியிருந்தாலும் சரி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆருடம் கூறி வருகிறார் திருமாவளவன்.மன்னிப்பா ஏன் கேட்க வேண்டும்?, உண்மையைத் தானே பேசினேன் என்று தடுமாற்றமின்றி கருத்தில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. ஆனால் பொய்கள் நிறைந்த திராவிடம் தடுமாற தொடங்கியுள்ளது.
துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, பத்திரிக்கையாளர் சோ ராமசாமி ஒரு ஜீனியஸ், சிறந்த பத்திரிக்கையாளர், உண்மையை சொல்ல என்றும் தயங்காதவர், 1971 ஆம் ஆண்டு நிகழ்வை சொல்லலாம். “1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலைபோட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.
இதனால், அப்போதைய திமுக. அரசுக்கு பெரிய கெட்டபெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். ‘பிளாக்’கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய ‘பப்ளிசிடி மேனேஜர்’ என சோ அட்டையிலேயே வெளியிட்டார்” என்று பேசினார்.
இதில் பெரியாரை அவர் எங்கு விமர்சித்தார். சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு என்று கூறிக்கொண்டு இந்து மதத்தையே ஒரேடியாக ஒழித்துக்கட்ட எத்தனித்தவர் பெரியார். மூட நம்பிக்கையை ஒலிக்கிறேன் என்று இந்து மத மூல விக்ரகங்களை உடைத்தவர் பெரியார். அவர் ராமனுக்கு பூமாலையிட்டார் என்றால் தானே விமர்சனமே?.
அவர் விதவை மறுமணம், சீர்திருத்த திருமணம், சாதிய ஏற்றத்தாழ்வு ஒலிப்பு, பெண்ணுரிமை என்று பல சீர்திருத்தங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் இவைகள் யாவும் நாட்டின் பல பகுதிகளில் பல தலைவர்களால், சமகாலத்தில் முன் எடுக்கப்பட்டவையே. இருப்பினும் சில சீர்திருத்தங்களுக்கு அவர் மூல வித்தாகவும் இருந்திருக்கலாம். அதற்க்காக இந்து மதத்தின் மீது மாட்டும் அவர் கொண்ட கண்மூடி தனமான விமர்சனங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளவோ, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இடத்தில் அவரை வைக்கவோ இயலாது.
இந்துக்களை ஆங்கிலேயன் கல்வியை கேடயமாக கொண்டு மதமாற்றினான், முகலாயன் வரிகளையும், சலுகைகளையுமே கேடயமாக கொண்டு இஸ்லாமியனாக்கினான் என்றால், இந்த பெரியான் சீர்திருத்தங்களையே கேடயமாக கொண்டு நாட்டையும், இந்து தர்மத்தையும் பலவீன படுத்தினான்.என்றே சொல்லவேண்டும்.
எனவே ரஜினி ஒன்றும் தவறாக பேசிவிடவில்லை, என்ன!! முரசொலி படித்தால் திமுக., துக்ளக் படித்தால் அறிவாளி என்று பேசியவர் கூடுதலாக திகா.,வின் விடுதலையை படித்தால் அவன் தேச துரோகியாக தான் வர முடியும் என்று பேசியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
நன்றி தமிழ் தாமரை VM வெங்கடேஷ்
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
2discount