கடமையை செய்வோம் தேசத்தை காப்போம்

இந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய  370 சிறப்பு சட்ட நீக்கத்துக்கு பிந்தைய முதல் குடியரசு தினம். 370 நீக்கத்தால்  மத்திய அரசின் எண்ணற்ற சலுகைகளை தடைகளின்றி சுவைக்கும் காஷ்மீரிகளுக்கு முழுமையான முதல் குடியரசு தினம் இதுவென்று என்றே கூறவேண்டும்.

எண்ணிலடங்கா தேச பக்தர்களின் தியாகங்கள், வலிமிகுந்த போராட்டங்கள், சிறை காலங்கள், உயிர் பலிகள், இரத்த கறைகளை கொண்டது நமது சுதந்திரம், பெற்ற சுதந்திரத்தையும் நாம் இன்பமாக பெறவில்லை, மதத்தின் அடிப்படையில் தேசத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானாக பிரித்து கொடுத்த வலியுடனே பெற்றோம். அத்தகைய தேசம் குடியரசான  நாள் இன்று.

இன்று நாம் ஜன நாயகத்தின் உச்சத்தில் வாழ்கிறோம், இங்கு எந்த அடிமைத்தனமும் இல்லை, நாட்டுக்காக போராட, உயிர் நீக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.அதேநேரத்தில்  உரிமைகளை மட்டுமே சிந்திக்கும் சுயநலன் நிரைந்த காலம் இது. தேசத்தின் நலன் சார்ந்த கொண்ட கடமையை சிந்திக்க மறுக்கும் காலம் இது . பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க மறந்த காலமும் இது.

இல்லாவிடில் காசுக்காக  வாக்களிக்கும் கூட்டம் பெருகி இருக்குமா?. காசை மட்டுமே நம்பி போட்டியிடும் கொள்கை மறந்த கட்சிகள், வேட்பாளர்கள் பெருகியிருப்பார்களா?. சிறுபான்மை ஓட்டுக்காக, ஜாதிய ஓட்டுக்காக தேச நலனையே அடகு வைக்கும் கட்சிகளுக்கும் இங்கு இடம் இருந்திருக்குமா?.

இந்த சூழல் மிகவும் ஆபத்தானது. இது நம்மை மீண்டும் அடிமை தனத்துக்கோ, மதத்தின் அடிப்படையிலான பிரிவினைக்கோ இழுத்துச் சென்றுவிடும். இதன் ஒரு அங்கம்தான் பாக்கிஸ்தான், பங்களாதேஸ் இஸ்லாமியரின் இந்திய குடியேற்றமும். அதை தடுக்க முயற்சிக்கும் பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் போராட்டங்களும். எனவே கடமையை செய்வோம் தேசத்தை காப்போம்.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ்  

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...